ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் வகுப்பு கலவர தடுப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.

தசரா விழாவையொட்டி நாகபுரியில் வியாழகிழமை நடை பெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது :

வகுப்பு கலவர தடுப்பு மசோதா இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது . இந்த வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தேசிய ஆலோசனை குழுவில் இருக்கும் சிலரின் நேர்மை குறித்து உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது. அவர்கள் தேச விரோத மனபான்மையுடன் செயல்படு கிறார்கள்.

நாட்டை மத்திய அமைசரவை ஆல்கிறதா அல்லது இவர்களை போன்றவர்களால் ஆளபடுகிறதா என்பதை மத்திய_அரசு தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்தார் .

தேசிய ஆலோசனை குழு தலைவராக சோனியாகாந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply