காங்கிரஸ்சும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரசாரத்துக்கு கறுப்புபணத்தை தண்ணீராக செலவழித்து வருவதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக்தர் அப்பாஸ் நக்வி இவ்வாறு தெரிவித்தார் . இது தொடர்பாக

தேர்தல்ஆணையத்திடம் புகார் தரப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார் .”தற்போது நடைபெற இருக்கும் 5 மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ்-கட்சியும் அதன் கூட்டணிக்கட்சிகளும் பணத்தை தண்ணீராக செலவழித்து வருகிறது . அவை அனைத்தும் கறுப்புப்பணம்.” என்று நக்வி தெரிவித்துள்ளார் .

“மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக ஆனால் , அது தற்போதைய ஆட்சியை விட மோசமானதாக இருக்கும். தனக்கு ஆதரவு தந்த மாவோயிஸ்டுகளை காப்பாற்றும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply