பிரஸ்ஸல்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மோடிக்கு அழைப்பு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீதான புறக்கணிப்பை கைவிட்டிருக்கும் ஐரோப்பிய யூனியன், வரும் நவம்பர் மாதத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்புவிடுத்துள்ளது.

பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிறுவன கலாசாரம் ,இந்திய ஆன்மிகநெறி குறித்த 10,ஆ வது கருத்த ரங்கத்தில் . ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் நரேந்திரமோடி இணைய வழியில் உரையாடினார்.

உரையாடலின் போது, குஜராத்தின் சிறப்பான வளர்ச்சியை பாராட்டியதுடன், அதற்கான முயற்சியை மேற் கொண்ட மோடிக்கு வாழ்த்துதெரிவித்தனர். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் மோடி விளக்கினார்.

நாட்டிலேயே முதல் முறையாக பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக தனியாக துறையை உருவாக்கியுள்ளதை சுட்டிக் காட்டினார். உலகளவில் இது போன்ற துறை அமைக்கப்பட்டுள்ள நான்கு மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாக இணைந்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய சூரியமின்சக்தி பூங்கா குஜராத்தின் சரங்காவில் நிறுவப்பட்டுள்ளதையும் மோடி எடுத்துக்கூறினார்.

இந்த உரையாடலின் போது, நவம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றகூட்டத்தில் பங்கேற்குமாறு மோடிக்கு அவர்கள் அழைப்புவிடுத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply