பொருளாதாரத்தில் இந்தியாவை விட சீனா மூன்று மடங்கு உயர்ந்துள்ளது .சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி_அடிப்படையில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.

எதிலும் அரைமனதுடனான முயற்சிகள் எடுக்கபடுகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இதேநிலைதான் நீடித்து வருகிறது. ஓட்டு

வங்கி அரசியலின் காரணமாக, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நிறை வேற்ற ஆட்சியிலிருக்கும் கட்சிகள் மறுத்துவருகின்றன.

காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும்மாநிலங்களை, மத்திய அரசு, பழிவாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்தால் , அவர்களை சகலவிதமான வித்தைகளையும் கையாண்டு பழிவாங்குகிறது.

சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல்நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது . அதற்க்கு முக்கிய சாட்சியக நான் உள்ளேன் . சி.பி.ஐ., நீதித்துறை வருமான வரித்துறை என, தங்கள கட்டுபாட்டில் எத்தனை_துறைகள், உள்ளனவோ அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவுகொடுத்து பார்க்கிறது.

வளர்ச்சி பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுகொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்க கூடியதாக மாறியுள்ளது . வளர்ச்சி பாதை, பயங்கரவாதத் தடுப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த அரசாக, மத்திய அரசு உள்ளது . என்று மோடி பேசினார்.

{qtube vid:=WpKikZpEAZE} tags;இந்தியாவின் கொள்கைகள் வளர்ச்சி அடிப்படையில் இல்லை ; நரேந்திர மோடி, நரேந்திர மோடி பேச்சு துக்ளக் வீடியோ

Leave a Reply