குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆட்சி நடத்துகிறார் என்றும் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுலுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் போட்டியாக அமைவார் என்றும் டைம்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது .

இதுகுறித்து அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை மேலும்

தெரிவித்திருப்பதாவது : அடுத்து இந்தியாவில் 2014-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் அடுத்த பிரதமர் வேட்ப்பாளராக முன்னிறுத்தபடுவார்.

தற்போதைய  குஜராத் முதல்வர்  நரேந்திர மோடி கடந்த பத்து ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆட்சி நடத்திவருகிறார். அவரது  தலைமையிலான அரசினால் குஜராத் மாநிலம் முன்னேற்ற நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மோடி சர்ச்சைகுரியவராக இருந்தாலும், விவேகமும் எதையும் துணிந்துசெய்யும் பேராவலும் கொண்ட அரசியல்வாதி என வெகுவாக பாராட்டியுள்ளது.

குஜராத்தின்  வளர்ச்சியை தொடர்ந்து , அவர் பிரதமராகும் பட்சத்தில் இதை போன்ற அதிசியங்களை மேலும் நிகழ்த்துவாரா_என்பது குறித்து “Modi means business but can he lead India ?” என தலைப்பில் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடும்போட்டியாக அமைவார், ராகுலுக்கு எதிராக இந்தியாவில் மோடி மட்டுமே வலுவான_நிலையில் இருக்கிறார் என்றும்  டைம்ஸ் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply