ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது. நாட்டில் முழு பெரும்பான்மையுடன் அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசு எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் உள்ளாகவில்லை என்கிற வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். நம் மீது எந்தக் கலங்கமும் இல்லை என்று..

நமக்கு முன்னாள் இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட அரசு, நாட்டை இருளில் தள்ளியது. குறிப்பாக ஊழல் மற்றும் மோசடிகளால் இந்த நாடு தோல்வியைத் தழுவியது என்றால் அது மிகையாகாது.

பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம்தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்லவேண்டும்.

ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கார் சிபிஐ.க்கு தடை விதித்து உள்ளார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். அதைக்கண்டு பயப்பட. இன்று அவர்கள் சிபிஐயை ஏற்றுக்கொள்ளவில்லை, நாளை அவர்கள் ராணுவம், காவல்துறை, உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்தையும் தவறு என்பார்கள்.

2007 ல், ஒருசில மாதங்களில் மோடி சிறையில் அடைக்கபடுவார் என காங்கிரஸ் மந்திரி ஒருவர் கூறினார். குஜராத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததில் இருந்து சி.பி.ஐ.வைத் தடுக்க நாங்கள் சட்டத்தை உருவாக்கவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தி அயோத்தி வழக்கை அதன் வக்கீல்கள் மூலம் தடுக்க முயல்கிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் நாட்டின் நலன்களுக்கு எதிராகவே வேலைசெய்வது என்ன வகையான மனநிலை.

இந்திய அரசியலின் வரலாற்றில் “மகாகத்பந்தன்” என்ற பெயரில் ஒரு தோல்வியுற்ற பரிசோதனையை பிரசுரிக்க ஒருபிரச்சாரம் நடந்து வருகிறது. அவர்கள் ஒருவலிமையற்ற அரசை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஒருவலிமையான அரசை உருவாக்க விரும்பவில்லை,

நரேந்திர மோடி

பாஜக தேசிய செயற்குழுவில் பேசியது

Leave a Reply