முழுநாடும் ஒரே குரலில் பேசும்போது, இந்த காங்கிரஸார்கள் மட்டும் வேறுகுரலில் பேசுகிறார்கள். நீங்கள் அனைவரும் காங்கிரஸ், தேசிய கான்ஃபிரன்ஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பேச்சுகளை பாராட்டுவீர்களா? அவர்கள் பேச்சை பாகிஸ்தான் பாராட்டும்.

காங்கிரஸின் அணுகுமுறையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சர்தார் வல்லபாய்படேல் இருந்த காங்கிரஸா இது? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்த காங்கிரஸா இது? இந்திய விடுதலைக்காக போராடிய காங்கிரஸா இது?

ஜம்மு காஷ்மீர் இன்று சந்திக்கும் பிரச்சனைக்கு முழு காரணமாக இருப்பது காங்கிரஸ், தேசிய கான்ஃபிரன்ஸ், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள்தான் காரணம். காஷ்மீ பண்டிட்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு காரணமும் அவர்கள் தான். நாட்டின் பாதுகாப்பு பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையில்லை, நாட்டின் அதிகாரம்தான் அவர்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது என்பதை நினைக்கும்போதே வருத்தமாக இருக்கிறது”

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸையும் மற்ற கட்சிகளையும் கடுமையாக விமர்சித் நரேந்திர மோடி

Leave a Reply