அமெரிக்க நாட்டின் வேதியியல் துறை விஞ்ஞானி லினஸ் பாலிங்கின். இவர் 1901 முதல் 1994 வரை வாழ்ந்தவர்.

புரத மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். அதற்காக இவருக்கு 1954-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1962-ல் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

மேடம் கிïரிக்கு அடுத்ததாக இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர் இவர்தான்.

இவர் வாழ்வில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. இவர் கல்லூரியில் சேர்ந்து முனைவர் பட்டம் வரை பெற்றுள்ளார். அதன்பிறகு இவருக்கு 2 நோபல் பரிசும் கிடைத்துள்ளது. ஆனாலும், பள்ளிச்சான்றிதழ் மட்டும் கிடைக்கவில்லை. பள்ளியின் சில நிர்வாக விதிகள் தான் அதற்கு காரணம். கடைசியில் பள்ளி நிர்வாகம், சான்றிதழை வழங்க 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.

Tags:

Leave a Reply