கர்நாடகாவில் 2008ம் ஆண்டு பல்-வேறு தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பாரதிய ஜனதா மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது*.

கர்நாடகாவில் 2008ம் ஆண்டு உடுப்பி, மங்களூர், சிக்மகளூர்,

சிக்கப்பல்லாபூர், கோலார், பெல்லாரி மற்றும் தேவனகிரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு தேவாலயங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது .

இதுதொடர்பாக விசாரணை செய்ய கர்நாடக அரசால் நியமிக்கபட்டிருந்த நீதிபதி சோமசேகர கமிஷனின் இறுதி அறிக்கை இன்று அரசிடம் அளிக்கப்பட்டது.

தேவாலயங்கள் மீதான தாக்குதலில் பாஜகவினர், சங் பரிவார அமைப்பினர் ,அரசியல்வாதிகள் மற்றும் மாநில அரசுக்கு எந்தவிதத்திலு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பிருப்பதாக கிறிஸ்துவ அமைப்பினர்-கூறியதில் எந்தவிதமான் அடிப்படையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது .

மதமாற்ற நடவடிக்கைகளும் , இந்துக்களை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் வெளியிடப்பட்ட தரம்தாழ்ந்த துண்டு பிரசுரங்களுமே தாக்குதலுக்கான முக்கிய காரணம் என்று எடியூரப்பாவிடம் வழங்கப்பட்ட கமிஷனின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது

Leave a Reply