உயர் திரு சாந்திப்பிரியா அவர்களின் உண்மையான பெயர் ஜெயராமன்.  மத்திய அரசின் ஒரு பிரிவில் உயர் அதிகாரியாக பணி புரிந்து பதவி ஒய்வு பெற்றவர் , இவர் பல பத்திரிகைகளில் கதைகளையும்  கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார் .  மேலும் பல  ஆலயங்கள், ஆஸ்ரமங்களுக்கு   மகான்களின் வரலாறுகளையும்  ஆலய வரலாறுகளையும்  எழுதித் தந்து வருகிறார். இவை அனைத்தையுமே ஒரு  தொழிலாக  செய்யாமல் ஆத்ம திருப்திக்காக சாந்திப்பிரியா எனும் புனைப் பெயரில் ஆன்மீகக் கதை மற்றும் கட்டுரைகளை  எழுதி வருகிறார் . இந்த சாந்திப்பிரியா எனும் புனைப் பெயரை அவருக்கு அளித்தது  அவரது  இனிய நண்பரும் , தாய் எனும் தமிழ் வார இதழின் ஆசிரியருமான் காலம் சென்ற திரு வலம்புரி ஜான் அவர்கள்.

http://santhipriyaspages.blogspot.com

(In village Gods See Tamil version in comments under each article )

இன்று உள்ளவர்கள் நாளை இருப்பதில்லை என்பதே சத்தியம் என்பதை மனதார உணர்ந்து உள்ளதினால் என் படைப்புக்கள் அனைத்தையுமே நானே  துவக்கி உள்ள சாந்திப்பிரியா பக்கங்கள் என்ற வலை தளத்தில் வெளியிட்டு  வருகிறேன். அதற்குக் காரணம்  நான் மறைந்து போனப் பின்  என் படைப்புக்கள்  என் சந்ததியினருக்கு தெரிய வேண்டும், என்னால் அவர்கள் பெருமை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

Tags:

Leave a Reply