அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . இதற்காக 6-ந்தேதி டெல்லி வருகிறார்.

7ந்தேதி மும்பை செல்கிறார். 8ந் தேதி டெல்லி பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 9ந் தேதி காலை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் இந்தோனேசியா செல்கிறார்.’

அமெரிக்க அதிபர் வருகையையொட்டி டெல்லி, மும்பைபியல் மிக பலத்த பாதுகாப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ஜெய்ஸ்இ- முகம்மத் மற்றும் இந்தியன்-முஜாகிதீன் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா பயணம் செய்யும் பாதைகளில் வர்த்தக கடைககள் மற்றும் நிறுவனங்களை அடைக உத்தரவிடப்பட்டுளது.போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கபட்டுளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் மவுரியாஷெரட்டன் ஒட்டலில் தங்குகிறார். இந்த ஓட்டல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுளது. ஓட்டலின் அனைத்துப்பகுதியிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுளது ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply