அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த  ஹவ்டி மோடி நிகழ்ச்சியில், அமெரிக்கர்கள், இந்தியர்கள் என 50 ஆயிரம்பேர் திரண்டனர். இந்திய பிரதமர் மோடியுடன்  அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்பங்கேற்றார் . போப்பை தவிர, அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கா வரும் வெளிநாட்டு தலைவர் ஒருவர்கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

இதற்கு முக்கியகாரணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல்தான். பிரதமர் மோடி இந்தியர்கள் அனைவரின் மிகுந்த அன்புக்குரியவராக இருக்கிறார். அவரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் இந்தியர்களின் நன்மதிப்பை பெறலாம்,

2016 ம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட தேசிய ஆசியர்கள் – அமெரிக்கர்கள் ஆய்வின்படி, ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்தான் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். ஹிலாரிக்கு 77 சதவீதம் . டிரம்பிற்கு வெறும் 16 சதவீதம்

Comments are closed.