கர்நாடக மானிலமான பெங்களூரில் பல இடங்களில் மிகப் பழமையான ஆலயங்கள் உள்ளன.அதில் ஒன்று தான் மன்னன் இராஜராஜ சோழன் காலத்திய ஆலயமான பஞ்சலிங்க சிவாலயம். பெங்களூரின் தென்பகுதியில் உள்ள இந்த ஆலயம் பொம்மன ஹல்லி மற்றும் ஹோசூர் செல்லும் பாதையில், சில்க் போர்ட் எனப்படும் பிரசித்தி

பெற்ற இடத்தில் இருந்து ஒரு புறம் பிரிந்து சென்றால் வரும் பேகூர் என்ற சிறு கிராமத்தில் உள்ளது. மிகக் குறுகிய சாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஐந்து சிவன் சன்னதிகள் உள்ளன. "ஒவ் ஒரு சன்னதியிலும் ஒவ் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவை ஒவ் ஒன்றும் ஒரு குறிப்பிட்ட சக்தி பெற்றவை எனக் கூறுகின்றனர்". ஒரு காலத்தில் பேகூர் என்ற இடம் சமிஸ்கிருத மற்றும் வேத பாடசாலைகளை பெற்றிருந்த பெருமை வாய்ந்த இடமாக இருந்துள்ளது. இந்த ஆலயம் 1300 வருடங்களுக்கு முன்பாக கட்டிப்பட்டு இருக்க வேண்டும். ஏன் எனில் அந்த ஆலயத்தை ஏறத்தாழ எட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குலோத்துங்க சோழன் கட்டியதாக கூறப்படுகின்றது.

பஞ்சலிங்க சிவாலய ஆலய அமைப்பு:

பார்வதி சமேதகராக எழுந்தருளி உள்ள சிவபெருமானின் சன்னதியான நாகேஸ்வரஸ்வாமி லிங்க வடிவில் அமர்ந்து உள்ளார். ஆலய அர்ச்சகரர்கள் தெரிவிக்கும் செய்தியின்படி அந்த சன்னதியில் காலையில் எழும் சுரிய கிரணங்கள் லிங்கத்தின் மீது படும் வகையில் அமைந்து உள்ளது.

நவரங்கா எனப்படும் நாகேஸ் வரலிங்க சன்னதியின் எதிர் பிராகாரத்தில் உள்ள மேற் கூரையில் பலவிதமான யந்திரங்கள், அஷ்ட திக் பாலகர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அதில் உள்ள பல விதமான யந்திரங்கள் மந்திர சக்தியினால் சக்தியூட்டப் பட்டவையாம். அதன் கீழ நின்ற படி இருந்து அந்த லிங்கத்தை பிரார்தனை செய்யும் பொழுது ஏவல்கள், மன பயங்கள், பில்லி சூனியங்களினால் ஏற்பட்டுள்ள தொல்லைகள் விலகும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த பிரார்தனையை எப்படி, எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்பதை அர்சகர்தான் கூறுவார்களாம். அந்த சன்னதியின் மற்ற்றொரு சிறப்பு என்ன எனில் சூரிய பகவான் மேற்கு நோக்கியபடி லிங்கத்தைப் பர்த்திருக்கும் வகையில் அமைந்து உள்ளதுதான். மற்ற எந்த ஆலயத்திலும் சிவலிங்கத்தின் மேற்கு பகுதியை நோக்கி சூரியனார் அமைந்திருக்கவில்லையாம்.

சுமார் மூன்று அல்லது மூணரை அடி உயர முள்ள ஒரு காளியின் சிலைக்கடியில் ஒரு அடி உயர சிவலிங்கம் உள்ளது. அந்த சன்னிதியில் உள்ள மேற் கூரையில் தாமரைப் போன்ற வடிவம் அமைந்துள்ளது. அதன் அடியில் நின்று கொண்டு பிரார்தனை செய்தால் மகட்பேறு கிடைக்கும், வழக்கு மன்ற தீர்ப்புக்கள் சாதகமாகும், எதிரிகள் விலகி ஓடுவர் என்று கூறுகின்றனர்.

தஷ்ஷிண காளி என்ற பெயரில் பார்வதி தேவி ஐந்தடி உயரத்தில் அமர்ந்து உள்ளாள். அவளை அங்கு பிரார்திப்பதின் மூலம் இரத்த சம்மந்தமான நோய்கள் விலகும், வாழ்வில் ஆனந்தம் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆலயத்தில் சுமார் மூன்று அடி உயர உள்ள கருணேஷ்வரர் லிங்க சன்னதியில் வயிற்று வலி, குடல் உபாதை, காது சம்மந்தப்பட்ட நோய்கள், நரம்பு தளர்ச்சி போன்றவை விலக ஒரு குறிப்பிட்ட திசையில் நின்று பிரார்தனை செய்ய வேண்டுமாம்.

நகரேஷ்வர லிங்க சன்னதியில் தொழில் விருத்தி அடையவும், தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் விலக பிரார்தனை செய்ய வேண்டுமாம். சோளேஸ்வர லிங்க சன்னதியில் நின்றபடி வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறுமாம். ஆலயத்தில் காளிங்க நர்தனர், கால பைரவர், பார்வதி, கையில் லிங்கத்தை ஏந்தியபடி வினாயகர், சப்தரிஷிகள் போன்றவர்களுக்கும் சிலைகள் உள்ளன. தினமும் இரவில் அஷ்டதிக்கு பாலகர்கள், ஐந்து தலை நாகமான காளிங்க நர்தனர் மற்றும் சப்தரிஷிகள் போன்ற அனைவரும் அங்கு வந்து சிவ பெருமானை ஆராதிப்பதாக ஐதீகம் உள்ளது.

பஞ்சலிங்க சிவாலய ஆலயம் எழுந்த கதை

இந்த ஆலயம் அமைக்கப்பட்டதின் வரலாற்றுக் கதை இல்லை என்றாலும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கும் கதை இது. ஒரு முறை அந்த பகுதியில் இருந்த மாபெரும்ரிஷி ஒருவர் தன்னுடைய பகதனுக்கு ஒரு குடுவையில் தண்ணீர் தந்து எந்த இடத்தில் அதை தெளித்தாலும் அந்த இடம் பொன்னாகிவிடும் என்று கூற அதை எடுத்துக் கொண்டு சென்றவன் கையில் இருந்த குடுவையில் இருந்து சில துளிகள் கரும்புத் தோட்டம் ஒன்றில் தெளிக்க அந்த இடம் பொன் ஆயிற்றாம். அந்த செய்தி குலோத்துங்க சோழனுக்கு போக அவன் அந்த குடுவையை வைத்திருந்தவனை அழைத்து வரச் சொல்லி அதன் விவரத்தைக் கேட்டார். ஆனால் குடுவையின் ரகசியத்தைக் கூறிவிட்டால் அதன் சக்தி போய்விடும் என அந்தரிஷி கூறி இருந்ததினால் அந்த மனிதன் மௌனத்தை சாதிக்க கோபமுற்ற அரசன் அவனைக் கொன்றுவிட்டான்.அதன் காரணமாக அவனுக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடித்தது. அதை நிவர்த்திக்க வேண்டும் எனில் குறிப்பிட்ட பல ஆலயங்களைக் கட்ட வேண்டும் என ஜோதிடர்கள் கூற அதனால் கட்டப்பட்டதே இந்த ஆலயம் என்று கூறப்படுகின்றது.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply