தில்லி சட்டப் பேரவை தேர்தல் மூலம் தலை நகரில் மாற்றம் பிறக்கவுள்ளது என்று பா.ஜ.க தில்லிபிரதேச தலைவர் விஜய்கோயல் கூறினார்.

நடந்துமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தேர்தலை தொடர்ந்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:

“இத்தேர்தலில் தில்லி வாசிகள் செலுத்திய வாக்குரிமை மாற்றத்துக்கான வாக்குகள். காங்கிரஸ்க்கு மாற்றாக பா.ஜ.க இத்தேர்தலில் முழுபலத்துடன் களம் இறங்கியுள்ளது. நாங்கள் அளித்த வாக்குறுதிகளினால் அனைத்துத்தரப்பு மக்களும் நம்பிக்கைவைத்து பா.ஜ.க.,வுக்கு சாதகமாக வாக்களித்திருப்பார்கள் என நம்புகிறோம்.

சில இடங்களில் மது, பணம்கொடுத்து வாக்காளர்களை கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை பலன்கொடுக்கப் போவதில்லை. விலைவாசி உயர்வு, ஊழல், பெண்களுக்கான பாதுகாப்பின்மை போன்றவற்றை பா.ஜ.க சிறப்பானமுறையில் மக்களுக்கு எடுத்துரைத்து பிரசாரம்செய்தது. அதன் மூலம் ஏற்கெனவே மக்கள்மனதை பாஜக வென்றுவிட்டது.

இதனால் தலைநகரில் புதிய ஆட்சி மாற்றம் பிறக்கவுள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில்வந்து வாக்களித்துள்ளனர். அதுவே எங்கள் கட்சிக்கான வெற்றி உறுதியாகியுள்ளது. தேர்தலை அமைதியாகநடத்தும் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டுகள்’ என்று அறிக்கையில் விஜய்கோயல் கூறியுள்ளார்.

Leave a Reply