சரிந்து வரும் பெட்ரோல் கார் உற்பத்தி டீசலுடன் ஒப்பிடுகையில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் , பெட்ரோல் கார்களின் விற்பனை சரிந்து வருகிறது. எனவே முன்னணி மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் கார் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் நம் நாட்டில் டீசல் கார்கள் விற்பனை 35 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல் கார்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.

எனவே பல முன்னணி நிறுவனங்கள் பெட்ரோல் கார் உற்பத்தியை குறைத்துள்ளன. கடந்த 30 தினங்களில் பெட்ரோல் கார்கள் கையிருப்பு உயர்ந்துவருவதால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது , அதேசமயம் டீசல் கார்கள் விற்பனை உயர்ந்து வருகிறது

பெட்ரோல் கார் கையிருப்பு அதிகரித்து வருவதையடுத்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் பெட்ரோல் கார் உற்பத்தியை மூன்று தினங்களுக்கு நிறுத்தி இருந்தது என்பது குறிப்பிடதக்கது .

Leave a Reply