திராவிட இயக்கங்களுக்கு எல்லாம் தாய் வீடாகத் திகழ்வது நீதிக் கட்சி. அதன் தலைவர்களில் முதன்மையானவர் பிட்டி. தியாகராயர். 1920 இல் நடைபெற்ற சென்னை மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்றது. தியாகராயரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார். இந்திய வரலாற்றில் இது ஒரு வியத்தகு நிகழ்வு. இவரது சேவையைப் பாராட்டி, சென்னையில் ஒரு பகுதிக்கு தியாகராய நகர் (தி.நகர்) என்று பெயர் சூட்டப்பட்டது.

Leave a Reply