ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய தலைமை பதவியிலிருந்து விலக பிஜே. தாமஸ் மறுத்துவிட்டார்.

கேரள மாநில அரசுக்கு பாமாயில் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பதாலும், தொலை தொடர்பு துறை செயலராகப் பதவி வகித்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியிருப்பதாக தலைமைகணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்திருப்பதாலும் அந்த பதவியை தாமஸ் வகிப்பது தார்மிக நெறிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியும் அவர் பதவி விலகமாட்டேன் என மறுத்துவிட்டார்.

அரசுக்கு எல்லாம் தெரியும்:தலைமை ஊழல், கண்காணிப்பு தடுப்பு ஆணையராக என்னை நியமிக்கும்போதே கேரள மாநில பாமாயில் இறக்குமதி ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்களும் அரசுக்கு தெரியும்; அதேபோல அலைக்கற்றை விற்பனையின்போது நான்-தான் தொலை தகவல் தொடர்பு துறையின் செயலாளராக பதவிவகித்தேன் என்பதும் அரசுக்கு தெரியும்.பிரதமரும் , உள்துறை அமைச்சரும் சேர்ந்துதான் சி.வி.சி என்னை நியமித்துள்ளனர். எனவே இந்த பதவியை நான் ராஜிநாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்று தில்லியில் நிருபர்களிடம் புதன்கிழமை நேரிலேயே தெரிவித்தார் பிஜே. தாமஸ்

Leave a Reply