பல்வேறு பெரிய பெரிய ஊழல்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு மன்மோகன் சிங்குக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என பாஜக விமர்சித்துள்ளது.

 

பாரதிய ஜனதா மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது; தனது அரசினுடைய ஊழல்களுக்கு பொறுப்புபெற்று பிரதமர் தனது பதவியை விட்டு உடனடியாக விலக வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது “உத்தரப் பிரதேசத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தலித்களின்-பாதுகாவலராக கூறி கொள்ளும் மாயாவதியின் ஆட்சியில் தலித் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது . உத்தரப்பிரதேத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. இதனால், சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார் .

Leave a Reply