பிரதமர் மன்மோகன் சிங்கின் பேட்டி திருப்தி தரவில்லை என்று பாஜக அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .

பிரதமர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் தந்தார் .

 

இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, பிரதமர் மன்மோகன்சிங் தனது பேட்டியில் முழுமையான தகவல்களை சொல்லவில்லை.

அவரிடம் இருந்து மக்கள் எதிர்பார்த்த விளக்கங்களும் வெளிவரவில்லை . காங்கிரஸ் அரசில் நடைபெற்ற ஊழல்களை மூடி-மறைக்கும் வகையில் அவரது பேட்டி இருக்கிறது . அவரது விளக்கங்கள் திருப்தி கரமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply