கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 223 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. இதில் ஏற்க்கனவே 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது . மீதமுள்ள 89

தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விபரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது .

ஜனதா கட்சியின் 11 வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது . இதில் தேர்தல் பிரசார சி.டி. Mஅற்றும் கேசட் வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது,

தமிழகத்தில் சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரேகட்சி பாரதிய ஜனதாதான். வரும் தமிழக சட்ட சபை தேர்தலில் நிச்சயமாக இரட்டை இலக்கில் வெற்றி-பெறுவோம். கர்நாடக மாநிலத்தை போல் தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் காலம்-வரும். பாரதிய ஜனதா எந்த ஒரு நிலையிலும் லட்சியத்தையும்,கொள்கைகளையும் விட்டு கொடுக்காது. மற்ற கட்சிகள் அவ்வளவு எளிதாக பாரதிய ஜனதாவை ஓரங்கட்டிவிட முடியாது. திராவிடக் கட்சிகள் தமிழகத்தை 44ஆண்டுகள் ஆண்டுள்து . ஆனால் தமிழகம் வளர்ச்சி அடையவில்லை மாறாக பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் வெற்றிபெற்று சட்ட சபைக்குள் நுழைந்தே ஆகவேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார்

Leave a Reply