தேர்தல் ஆணையத்தை மிரட்டும்வகையில் பேசிவரும் கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை-விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும். தேர்தல்ஆணையத்தின் விதிமுறைகளைக்கண்டனம் செய்து முதல்வர் பேசி வருகிறார். அவரது பேச்சு தேர்தல் ஆணையத்தை மிரட்டுவது

போன்று உள்ளது. எனவே அவர் மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை முதல்வர்-பதவியிலிருந்து கருணாநிதியை நீக்கி வைக்க வேண்டும். தேர்தல்-ஆணையம் தனது விதி முறைகளை மேலும்கடுமையாக்க வேண்டும். அத்வானி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,அருண் ஜெட்லி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் போன்ற தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல்பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர் . விரைவில் அவர்களது பிரசாரதிட்டம் அறிவிக்கப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply