மேட்டுப்பாளைய நகரசபையில் போட்டியிடும் பாஜக. மற்றும் கொ.மு.க. வேட்பாளர்களை_ஆதரித்து பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல்பிரசாரம் செய்தார்.

தேர்தல்பிரசாரத்தில் அவர் பேசியதாவது பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா ஜ க எந்தக்காரணம் கொண்டும் எந்தக்கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டோம் என அறிவித்து தனியாக_போட்டியிட்டோம். ஆனால் நடை பெறும் உள்ளாட்சி தேர்தலில் நம்மை விரும்பிவந்த கொங்குநாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டோம். மேற்கு பகுதியில் இந்தகூட்டணி சக்திவாய்ந்த கூட்டணி பலம்வாய்ந்த கூட்டணி. இங்கு பாழ்பட்டுகிடக்கிற நகராட்சியை சீர்செய்ய மட்டுமே போட்டியிடுகிறோம்.

கடந்த 45_ஆண்டுகாலமாக தமிழகத்தை திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்டுகொண்டு வருகின்றன. திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ் நாடு என்ன முன்னேற்றதை கண்டது? என்ன வளர்ச்சியை அடைந்தது? விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லை. அழிந்துகொண்டு வருகிறது. தொழில்வளர்ச்சி அடைந்துள்ளதா? இல்லை.

திருப்பூர், கோவை நகரங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுகின்றன. எதுவுமே முன்னேறவில்லை. ஒன்றை_மட்டும் சொல்லலாம். குடிகாரர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து_விட்டது. திட்டமிட்டு தமிழ்சமுதாயத்தை அழித்து விட்டார்கள். தமிழ் நாட்டில் எந்த முதல்_அமைச்சராவது ஒருமுறையாவது மக்களே குடிக்காதீர்கள் என கூறியிருகிறார்களா? எல்லாமே வீழ்ச்சி. ஆனால் மதுகடைகள் மட்டும் வளர்ச்சி. 45_ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் கீழே போய்க்கொண்டிருக்கிறது என்றார்.

Leave a Reply