பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி தந்தார் . அதில் அவர் தெரிவித்ததாவது :-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்காக உழைப்பதில் வைகோ திறமையானவர். கூட்டணி கட்சியினரை தனது கட்சிக்காரர்களை போல பாவித்து அனைத்து

பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்வார்.

பழுத்த அரசியல்வாதியான அவர் விரும்பினால் பா ஜ க,வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம். அவ்வாறு அவர் வரும்பட்சத்தில் அவரை அன்புடன் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். இது பற்றி அவர் தான் முடிவு செய்யவேண்டும்.

பா ஜ க,வின் தேர்தல் அறிக்கை வரும் 25ந்தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. திமுக. தனது தேர்தல்-அறிக்கையில் இலவசங்களை முன்னுறுத்தி உள்ளது. இது மக்கள்-எப்போதும் கையேந்தி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது . இந்தநிலை மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply