முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துயிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ. ராசா மீதான கைது நடவடிக்கை காலம் கடந்ததாகும்,

இருந்தா போதிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும் .தமிழகத்தில் தேர்தல்-வரும் சமையத்தில் , ஸ்பெக்ட்ரம் ஊழலல் விவகாரத்தில் மக்களின் கோபத்தை குறைக்கும் வகையில் கண்-துடைப்புக்காக அவரதுகைது நடவடிக்கை அமையலாம் என அரசியல் நோக்கர்கள் ஏற்கெனவே தெரிவித்து வந்தனர் . எனவே, தற்போதைய கைது நடவடிக்கைகள் போலியானதாக இல்லாமல் உறுதியானதாக-இருக்க வேண்டும்.

1.76.645 கோடி ரூபாய்யை தனி ஒரு மனிதனானால் செய்ய முடியாது என முதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தது உண்மை. எனவே, இந்தஊழலில் தொடர்புடைய பிற அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோரை கைது செய்வது மட்டும் அல்லாமால் அவர்களினுடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply