தை பிறக்கிறது வழியும் பிறக்கிறது.  மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வலி மறைந்து மோடியின் நல்லாட்சியில் நல்வழி பிறந்துள்ளது.  பல துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
நம் தமிழர் திருநாளம் பொங்கல் பிரதானமாக விவசாயிகளுக்கான பண்டிகை.  நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்திட்டத்தை பரிசாக அளித்திருக்கிறார்.  இதன் மூலம் விவசாயிகள் வாழ்வு மகிழ்ச்சியுடன்                  மலரப் போகிறது.


நவீன இந்தியாவில் நவீன யுக்திகளை விவசாயிகள் பார்க்கப்போகிறார்கள்.  பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை நம் நாடு பார்க்கப்போகிறது.  அதன் மூலம் பசியின்மை மலரப்போகிறது.  பயிர் பாதுகாப்பின் மூலமாக பாரதநாட்டினர் அனைவருக்கும்  உயிர் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார் நம் பிரதமர்.  ஆக இது ஏர் உழவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் அளிக்கப்பட்ட பொங்கல் பரிசு.  இதேபோல பல திட்டங்கள் தமிழகத்திற்கும் கிடைத்திட தாமரை மலர்ந்திட வேண்டும்.

இந்த புதுப்பொங்கல் நன்னாளில் பசியில்லாத, மதுயில்லாத, பஞ்சமில்லாத, லஞ்சமில்லாத  புதியதோர் தமிழகம் படைப்போம்.  ஆம் இந்த தைப்பொங்கலில் புதியதோர் தமிழகம் படைப்போம்! புதிய வாழ்க்கை தமிழருக்கு அளிப்போம்!!

    அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
   என்றும் மக்கள்;; பணியில்
                                                                                                                                       
                                                                                                                         (Dr. தமிழிசை சௌந்தரராஜன்) 

Leave a Reply