மதுரையில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, சனிக்கிழமை (ஏப்.28) தொடங்க இருந்த பாரதிய ஜனதாவின் மாநில மாநாடு ஒத்தி வைக்கபட்டுள்ளது. மாநாடு நடை பெறும் புதிய தேதியை தமிழக பாரதிய ஜனதா மையக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் மாநில மாநாடுக்காக மதுரையில் விரகனூர் சுற்றுச்சாலை அருகே 37 ஏக்கரில் மாநாட்டு_வளாகம் அமைக்கப்பட்டது. இரண்டரை லட்சம் சதுரஅடியில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் பெரும் பகுதி முடிவடைந்த நிலையில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் மழை காரணமாக, இப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் வியாழக் கிழமை பெய்த கன மழையால் பந்தலுக்குள் மழை நீர்_தேங்கியது. அதைதொடர்ந்து மாநாடு ஒத்தி வைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது.

Tags:

Leave a Reply