ஊரக பகுதி மக்களுக்கு நகர்ப்புற_வசதிகளை தரும் கலாமின் கனவு திட்டமான "புரா' முழுதோல்வி அடைந்துவிட்டதாக மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார் (அதாவது இவங்க கொண்டுவந்த திட்டம் எல்லாம் வெற்றி பெற்று விட்டதாம்) .

மேலும் சீரமைக்கப்பட்ட "புரா' திட்டத்தை

தொடங்கிவைத்துள்ளார் : இப்போது அறிமுகப்படுத்தபட்டுள்ள திட்டம் கலாமின் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாம் . கலாமின் திட்டம் முழுதோல்வி அடைந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

சரி நாட்டை ஆள்வது நீங்களா கலாமா? எந்த திட்டத்தை தான் நீங்க வெற்றி கரமாக நடத்தியுல்லிங்க ? காமன்வெல்த் விளையாட்டு போட்டியை கூட ஒழுங்கா நடத்த தெரியாம் இந்தியாவுக்கு கேட்ட பெயரை வாங்கி தந்தவங்கதானே! புரா திட்டத்தையே நீங்க ஈடுபாடுடன் நன்றாக செய்திருக்கலாமே?, இன்னொரு திட்டத்தை என் அறிமுகம் செய்கிறீர் ? எல்லாம் கமிசன் கதையாகதான் இருக்கணும் . இவங்க பப்பு எல்லாம் கலாம் கிட்ட வேகாது தில்லையா.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply