பரிகாரம் தேடியே, திமுக., இலங்கையில் தமிழர்களைகொன்று குவித்த போது, காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த திமுக., தற்போது பரிகாரம்தேடி, “டெசோ’ மாநாட்டை நடத்துவதாக , பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; நாடு முழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்திற்கு பெட்ரோல், டீஸலின் விலை உயர்வே காரணம். தொடர்ந்து இதன் விலையை உயர்த்துவது கண்டிக் கத்தக்கது.

“டெசோ’ மாநாடை நடத்த திமுக,வுக்கு தார்மீக உரிமை யில்லை. ஈழத்தமிழர்களை பொறுத்த மட்டில், திமுக., மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் குவியல், குவியலாக கொன்று குவிக்க பட்டதற்கு, காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்துள்ள திமுக,வுக்கும் பங்குள்ளது. அதற்க்கு பரிகாரம் தேடியே, திமுக., “டெசோ’ மாநாட்டை நடத்துகிறது. இந்தமாநாட்டால், எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply