ரஜினியின் அடுத்த படம் ‘ராணா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் ராணா படத்தை இயக்குகிறார். ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் இணைந்து ஏற்கனவே “படையப்பா”, “முத்து” போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

பலவருடங்களுக்கு முன்பாக வந்த மூன்று முகம் படத்தில் ரஜினி காந்த் மூன்று வேடத்தில் நடித்தார். அதில் ரஜினியின் “அலெக்ஸ் பாண்டியன்” கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மூன்று வேடத்தில் நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணி படமாக தமிழ், இந்தி , தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

Leave a Reply