தர்மத்தின் மீது நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் காந்திஜிக்கு சிறு வயது முதலே இருந்தது. அவர் ஆன்மிகத்தில் யோக சாதனை எதுவும் செய்யவில்லை. ஆனால் அவரின் ரோமத்தில் கூட ஆன்மிகம் ஆழப் பதிந்துள்ளது.

1936, டிசம்பர் 5-ம் தேதி நாளிதழான 'ஹரிஜன்' பத்திரிகையில் காந்திஜி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார். யோகக் கலை என்பது எனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லை.

நான் இன்று கடைப்பிடிப்பதெல்லாம் சிறுவயதில் எனது வளர்ப்பு தாயார் கற்பித்துக் கொடுத்ததுதான். எனக்கு பேய், பூதம் பற்றி பயம் இருந்தது. பேய், பூதம் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி கவலையடையாதே, எப்போது உனக்கு பயம் ஏற்படுகிறதோ அப்போது ராம நாமத்தை உச்சரித்துவிடு என்று அவர்கள் கூறியிருந்தனர். ஆகவே சிறுவயது முதல் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் என் வாழ்நாளில் என் மனத்திரையில் ஆழமாகப் பதிந்து விட்டது.

இதற்குமுன் 1933, மார்ச் 31-ம் தேதி ஹரிஜன் சேவக் பத்திரிகையில் குறிப்பிடும் போது, எனது மனமும் இதயமும் வெகு நாட்களுக்கு முன்பே இறைவனின் உண்மையான, உன்னதமான பெயர் சத்தியம் என்று அறிந்து கொண்டது. அந்த சத்தியம் ராமநாமமேயன்றி வேறில்லை. மிகவும் கடினமான சூழல்களிலும், ஏன் இப்போதும் கூட அந்த மந்திரம் தான் என்னைக் காப்பாற்றி வருகிறது. இதை நான் எழுதும்போது எனது சிறுவயது நிகழ்வு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. என் வீட்டிற்கு அருகில் ஒரு ராமர் ஆலயம் இருக்கிறது. நான் தினமும் அங்கே வழிபடச் செல்வேன். அங்கு சென்று வழிபடுவதால் எனது பாவங்கள் தொலைந்து விடுவதாக உணர்ந்தேன். பாவத்திலிருந்து விடுபட்டு தினசரி சக்தியை சேமித்ததாக உணர்ந்தேன்.

அந்த ஆலயம் என் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமானது. அந்த ஆலயத்தில் தான் ராமனை சிந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகமாக எழுந்தது. நமது ஹரிஜன சகோதரர்களுக்கு இதுபோன்று ஒரு ஆலயம் எழுப்பி அதில் அவர்களை வழிபட வகை செய்யப்படுமாயின் அது மிகுந்த நன்மையாக இருக்கும் என்று காந்திஜி ராமநாமத்தின் மீது தனக்கு உள்ள மதிப்பையும், மரியாதையும் அதே நேரத்தில் ஹரிஜன சகோதரர்கள் ஆலயத்தினுள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்கு அடித்தளமாக இருந்தார்.

ராமாயணம் படிப்பது சிறுவயதில் ஏற்பட்ட பண்பு

சிறுவயதில் ஏற்படக்கூடிய பண்பாடுகள் பற்றி காந்திஜி தனது சுயசரிதை 10-ம் தேதி அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமாயணம் படிப்பது என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. தந்தையார் நோய்வாய்ப்பட்டதினால் அநேக நாட்கள் போர் பந்தரில் இருக்க நேரிட்டது. அங்குள்ள ராமர் ஆலயத்தில் இரவுதோறும் ராமாயணம் படிப்பது வழக்கமாக இருந்தது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தரான பீலேஷ்வரத்தைச் சார்ந்த லாதா மகராஜ் ராமனுடைய கதையை, கேட்பவர் நெஞ்சம் உருகும் விதத்தில் கூற வல்லவர்.

அவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. இறைவனுக்கு சார்த்தப்பட்ட வில்வ இலைகளை தொழுநோய் புண்ணில் வைத்துக் கட்டிக்கொண்டு ராம நாமத்தை எப்போதும் உச்சரித்து வந்தார். இறுதியில் அவரது தொழுநோய் அறவே நீங்கிவிட்டது. கேட்பவருக்கு இது உண்மையோ, பொய்யோ என்றும் கூட தோன்றலாம். ஆனால் அது உண்மைதான்.

லாதா மகராஜ் அவர்கள் ராமனது கதையைக் கூறும் போது தானும் மெய்மறந்து கேட்பவர்களையும் மெய்சிலிர்க்கச் செய்வார். பாடல்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள், கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். எனக்கு அப்போது 13 வயது இருக்கலாம். நான் அவருடைய ராமாயண கதை கேட்டு மிகவும் பூரிப்படைந்தேன். ராமநாமம் கேட்பதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என உணர்ந்தேன். துளசிதாசரின் ராமாயணம் மிகவும் உன்னதமான படைப்பாகும்.

ராமநாமத்தின் மகிமை

ஞானம், அறிவு, வயது ஆகியவை அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் காந்திஜியின் மனத்தில் ராமநாமத்தின் மகிமையும் அதிகரித்து வந்தன. ராமநாமத்தைச் சொல்வது அவரது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.

"ராமநாமம்" என் இளமைக் காலங்களில் அதிகம் வெளிப்படா திருந்தாலும் என் உள் மனதில் அது அதிகமாக வேரூன்றியிருந்தது. (1934,ஹரிஜன் ஆகஸ்ட் 17) ராமநாமத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாடு மிகவும் உயர்வானது என்று கூற அவர்களும் காரணம். யதெனில் ராமநாம மகிமையின் காரணமாகத்தான் தீய நடவடிக்கையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. விகாரமான எண்ணங்கள் தன்னில் உதயமாகும் போது என்னைக் காப்பாற்றியது ராம நாமம் தான் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ராம நாமத்தின் உயர்வு புத்திபூர்வமாக ஆராய்வதில் வராது. அதே நேரத்தில் மிகுந்த சிரத்தையும், பக்தியும் இருப்பின் அனுபவப்படும் வாய்ப்பு உள்ளது. (கல்யாண், இறைவன் சம்பந்தப்பட்ட கட்டுரையின் தொகுப்பு) காந்திஜி இயற்கை மருத்துவ முறைகளை முன்னரே அறிந்திருந்தார். ஆயின் ராம நாமம் சொல்லிக் கொண்டிருந்ததால் இயற்கை மருத்துவ சிகிச்சைக்:கு அது போதுமானது என உணர்ந்தார்.

1947, அக்டோபர் 5 ஆம் நாளைய ஹரிஜன் சேவக் ஏட்டில் இன்று எனது ஒரே மருத்துவர் ராமன் தான். பிரார்த்தனையின் போது பாடப்படுகின்ற பாடல்களில் கூறுவது போல் ராமன் உடல், உள்ளம், ஒழுக்கம் ஆகிய எல்லாவற்றிலும் ஏற்படுகின்ற தீமைகளை அகற்றக் கூடியவன். இயற்கை மருத்துவர் நிபுணர் டா.தீன்ஷா அவர்களுடன் இது பற்றி பேசிக் கொண்டிருக்கையில் முழு உண்மையும் தெரிந்துவிட்டது. எனது கருத்துப்படி இயற்கையான மருத்துவத்திலும் ராமநாமத்திற்க இடமிருக்கிறது. ராமனை ஆராதிப்பவருக்கு மண் மற்றும் நீர் சிகிச்சையை விட ராமமந்திரமே சிறந்தது என்பது எனது கருத்து என்று எழுதியுள்ளார்.

1942 முதல் 1944 வரையிலான காலகட்டங்களில் காந்திஜி சிறைவாசம் அனுபவித்த போது 21 நாட்கள் உண்ணாவிரத நோன்பு இருந்தார். உண்ணாவிரத நோன்பு பற்றி காந்திஜி குறிப்பிடுகையில், நான் உண்ணாவிரத காலத்தில் சிலவேளையில் நீர்கூட  அருந்தாமல் இருந்தேன். ஆரஞ்சு பழச்சாறு அருந்தாமல் இருந்தேன். என்னை மருத்துவர்கள் சில நாட்கள் பரிசோதனை செய்து பார்த்த பின்னர் இவை அனைத்திலும் நான் உறுதியாக இருக்க எனக்கு ராமநாமம் தான் உதவியது என்றால் அவர்கள் ஆச்சரியப்பட்டுபோயினர்.

ஏனென்றால் ராமன் என் உள்ளத்தில் கோயில் கொண்டிருந்தார். ஆகவேதான் உறுதியாக இருக்க முடிந்தது. (ஹரிஜன் சேவக் 1947 நவம்பர் 23) காந்திஜி பாதயாத்திரை செல்லும் போது அவரின் நினைவுகள் குறித்து மனுகாந்தி வருணிக்கையில் காந்திஜிக்கு மிக அதிகமாக வியர்வை வெளியாகிக் கொண்டிருக்கிறது. சிலதூரம் எனது உதவியுடன் நடந்த பின்பு அவரது கால்கள் தள்ளாடத் துவங்கின. நான் மிகுந்த எச்சரிக்கையாக அவரது தலையை பிடித்துக் கொண்டு நிர்மல் குமார் போஸ் என்பவரை உரக்கக் கூவி அழைத்தேன் அவர் உடனடியாக வந்தார். நாங்கள் காந்திஜியை பிடித்து படுக்கையில் உட்கார வைத்து இளைப்பாறச் செய்தோம். காந்திக்கு நோய் ஏதும் ஏற்படின் மக்கள் என்னை முட்டாள்தனமாக கலந்து கொண்டதாக கடிந்து கொள்வர் என்று எனக்கு தோன்றியது. அருகில் உள்ள கிராமத்தில் சகோதரி சுசீலாவை அழைத்தால் நல்லது என்று தோன்றியது.

நான் ஒரு கடிதம் எழுதி நிர்மல் குமார்ஜி மூலமாக அனுப்ப எண்ணி அவரை அழைத்த ஒலி கேட்டு காந்திஜி எழுந்திருந்தார். எழுந்த அவர், என்ன 'மனுடி' (மகாத்மா காந்திஜி என்னை மனுடி என்று செல்லமாக அழைத்திடுவார்)என்றதும் நான் அருகில் ஓடோடிச் சென்றேன். நீ நிர்மல் பாபுவை கூவி அழைத்தது எனக்கு நன்றாக கேட்டது. நீ குழந்தையாக இருப்பதால் நான் உன்னை மன்னித்துவிடுகிறேன். நீ வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. முழுமனதுடன் ராமநாமம் ஜெபித்தாலே போதுமானது. நிர்மல் பாபுவை அழைத்ததற்கு பதிலாக ராமநாமத்தை உச்சரித்தால் எனக்கு சரியாகிவிடும் என்றார். என்னுடைய மருத்துவரே ராமன் தான். நான் எந்த நாள் வரையிலும் வேரை செய்ய வேண்டும் என்று ராமன் நினைக்கின்றாரோ அதுவரை அவர் என்னை உயிருடன் வைத்திருப்பார். தேவையில்லையெனில் என்னை எடுத்துக் கொள்வார்.

ராம நாமமே சிறந்த மருந்து

நோய்வாய்ப்பட்ட ஒரு சகோதரிக்கு காந்திஜி இவ்வுலகில் தலைசிறந்த மருந்து ராமநாமமே என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதன் வாயிலாக சிறந்த கட்டுப்பாடுகளை தங்களுக்குள்ளே கடைப்படித்துக் கொள்வார். கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க இக்கால கருவிகள் எதுவும் அவர்களுக்கு தேவைப்படாது. அவர்கள் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வர். ராமனுடைய பிரஜைகள் எப்போதும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பர். அப்படிப்பட்ட ராம ராஜியம் இன்று நமக்கு தேவை என காந்திஜி தெரிவித்திருந்தார். (காந்தி சொற்பொழிவு-பிரிவு.25பக்கம் 583)

1946-மே 5ம் நாளைய ஹரிஜன் சேவக் பத்திரிகையில், தாளலயத்துடன் ராமநாம பாடல் பாடுவது மிகச் சாதாரண விஷயம்தான். இந்துக்கள் அல்லாதோர் இதில் எப்படி கலந்து கொள்ள முடியும் என்ற கேள்விகள் காந்திஜியின் முன் எழுந்த போது, ராமநாமம் உச்சரிப்பதும், ராம மகிமைகள் குறித்து பாடுவதும், இந்துக்களுக்கு மட்டும் தான் சொந்தம் முஸ்லிம்கள் எங்ஙனம் இதை ஏற்றக் கொள்ள முடியும்? என்று கேட்ட போது, எனக்கு மனதில் மிகுந்த சிரிப்பு வருகிறது என்றார்.

நான் பிரார்த்தனை செய்யும், ராமன் தசரத சக்ரவர்த்தி மைந்தன் ராமன் அல்ல, வரலாற்று நாயகன், ராமநாமம் மட்டுமல்ல, அயோத்தி நாயகனை மட்டும் பற்றியதல்ல. சனாதனதர்மத்தின் பிரிக்க முடியாத இணையற்ற மக்களின் நாடி நரம்புகளில் இழையோடிக் கொண்டிருக்கின்ற ராமபிரானைத்தான் பாடுகிறேன் என்ற தெளிவு படுத்தியதுடன், முஸ்லிம்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆகவே முஸ்லிம்களுக்கு இந்த பெயரை உச்சரிப்பதில் எந்த குழப்பமும் வரவேண்டாம் என்று கூறியிருந்தார்.

(காந்திஜி) இந்துஸ்தானத்தின் மீது பற்று கொண்டவர். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையின் பொது வெளிப்படையாக ராமநாமம் கூறுவது ஒரே தேசத்தில் வாழும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை புண்படுத்தக் கூடிய விஷயமாக அமையுமல்லவா? இந்துஸ்தானத்தில் மத வேற்றுமைகள் உள்ளன. அவர் (காந்திஜி) மக்களிடத்தில் இந்துக் கடவுள் பற்றி கூறினால் பழமையான சிந்தனை கொண்டவர்களிடம் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமல்லவா? முஸ்லிம் லீக்கும் இதைத் தானே குற்றம் சாட்டுகிறது? ராமராஜ்யம் நிறுவுவதுதான் அவரின் லட்சியமாக உள்ளது. ஒரு உண்மையான முஸ்லிம் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்? என்பன போன்ற கேள்விகள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

காந்திஜியின் நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்திற்கு 1946, ஆகஸ்ட் 28ம் தேதி ஹரிஜன் சேவக் சமாஜ் பத்திரிகையில் காந்திஜி பதில் எழுதியிருந்தார்.

உண்மையான முஸ்லிம்கள் ராமநாமத்தை ஒருபோதும் தீமையாகக் கருத மாட்டார்கள். ராமநாமம் வெறும் பொழுது போக்கிற்காக உச்சரிக்கப்படும் நாமம் அல்ல. இந்த தேசத்தில் வாழும் நானும், லட்சக்கணக்கான இந்துக்களும் எங்கும் நிறைந்த பரம்பொருளை அழைக்கும் விதமாக இது அமைந்துள்ளது. ராமனது பெயருக்குப் பின் உள்ள அவனது நாமம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது, சிறந்தது. வரலாற்று நாயகனோ அல்லது எந்த பெயரிலோ இருக்கட்டும், நான் இந்து தர்மத்திற்கு சொந்தக்காரன் என்று வெளிப்படையாகக் கூறுவதால் மற்றவர்களுக்கு என்ன துயரம் வரப்போகிறது?

குறிப்பாக நான் இந்து தர்மத்தைச் சார்ந்தவன் என்றால் முஸ்லீம் லீக்கிற்கு ஏன் வருத்த வர வேண்டும்? காந்திஜியின் இந்த விளக்கங்கள் எல்லாம் வெறும் முதலைக் கண்ணீராக சித்தரிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கின் பின்னால் ஒன்றுதிரண்டனர். இதனால் தேசம் இரண்டாகப் பிளவுப்பட்டது. காந்திஜி தன் வாழ்நாளின் இறுதிவரை ராமநாமத்தை கைவிடவே இல்லை.

ராமநாமத்தை வைத்து முஸ்லிம்கள் மனதில் தோன்றிய தீய எண்ணம் தேசப்பிரிவினையில் போய் முடிந்தது. சுதந்திரம் பெற்ற பின்பு "ராமஜன்ம பூமி"-பாபர் மசூதி சம்பந்தப்பட்ட பல விவாதங்கள் எழுந்தன. ராமன் வரலாற்று நாயகனாக சித்தரிக்கப்பட்டால் பாரத நாட்டு முஸ்லிம்கள் தங்களின் நிகழ்கால, எதிர்கால சந்ததியினருக்கு தங்களின் முன்னோர்கள் ராமன் அல்லது பாபர் இவர்களில் யாரை சுட்டிக் காண்பிப்பர்? இடைக்காலத்தில் சில காரணங்களால் வழிபாட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நம் உடம்பில் ஓடுவது நம் முன்னோர்களின் ரத்தம் தான் என்பதில் ஐயமில்லை.

Tags; உலகில், ராம நாம, ராம நாமம், தலைசிறந்த, மருந்து, ராம நாமமே, காந்திஜி , இந்துஸ்தானத்தின்

ஸ்ரீ தேவேந்திர ஸ்வரூப்

Leave a Reply