அந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து எல்லாம் கடிதம்

வருகிறதோ அதிலெல்லாம் கன்னிமேரி மாவட்டம் என எழுதி அனுபச்சொன்னார்கள்.அவ்வாறே கடிதங்களும் வந்துக்கொண்டிருந்தது.

இது நமக்கு தகவலை உறுதி படுத்தியது.இராமநாதபுரத்தில் ஒரு லட்சம் பேரை மதம் மாற்றப்போவதாகவும்,அவர்களின் பெயர்களையும் வெளியிட்டார்கள்,இவை அனைத்தும் வெளீப்படையாக நடந்தன. சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. தூண்டுதலால் விநாயகர் சிலைகள் துடப்பத்தால் அடிக்கப்பட்டு தெரு முச்சந்தியில் வைத்து உடக்கப்பட்டது.இந்த இந்துக்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்கவும்,இந்துக்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச ஒரு இயக்கம் தேவை என் எண்ணியது சங்கம்.

கரூர் கூடிய மாநில குழு கூட்டம் இயக்கத்திற்க்கான பொறுப்பை திரு.கோபால்ஜீயிடம் தந்தது.இந்து ஆலயப்பணிக்காக நிறைய போராடி இருக்கிறார்.அவர் இந்து மக்கள் முன்னனி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.அதன் பெயரை சுருக்கி இந்து முன்னனி என வைத்தால் மக்கள் மனதில் பதியும் என் எண்ணி சங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்க்கப்பட்டது. அனுமதி தரப்பட்டதுடன் ரூ.35 கொடுத்து இயக்கத்தை உருவாக்கி கட்டமைக்கும் பொறுப்புடன் கன்னியாகுமரி அனுப்பிவைக்க்ப்பட்டார் கோபால்ஜீ.

தொடரும்……..

Leave a Reply