ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணமும் மகாபாரதமும் பாரததேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றை கதை , காப்பியம் என்று சொல்லாமல், வட மொழியில் இதிஹாசம் என்று அலைக்கபடுவதர்க்கும் ஒருகாரணம் உள்ளது . வால்மீகி முனிவரும் , வியாசரும் எழுதிய இவை உண்மையாக நமது தேசத்தில்நடந்தவை. "இதி- ஹாசம்' என்றால் "இது நடந்தது' என ஒருபொருள் உண்டு.

வால்மீகிக்கும் வியாசருக்கும் பிறகு வந்தவர்கள், அவர்கள் வாழ்ந்தகாலத்தின் நடைமுறையைக் கொண்டு சில மாற்றங்களை மூலக்கதையைச் சிதைக்காமல் சிறப்பாக எழுதித்தொகுத்தார்கள்.

வால்மீகி ராமனை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கடவுளாகவே கருதினார். ஆனால் கம்பனோ ராமன் அவதாரபுருஷன் என்றாலும், ராமனை ஆரம்பத்தில் மானுடனாகவே கருதி  இறுதியில் கடவுளாக்குகிறார். இப்படி சிலவேற்றுமைகள் காலத்திற் கேற்பவும், எழுதியவர்களின் சிறந்தகற்பனைக்கு ஏற்பவும் நமது காவியங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் கருத்து ஒன்று தான். "தர்மம் நிலைபெறவேண்டும்' என்பார் ராமன்; "அதர்மம்  அழியவேண்டும்' என்பார் கிருஷ்ணன். இவை இரண்டின் பொருளும் ஒன்று தான். ஆனால் அவர்கள் வாழ்ந்துகாட்டிய முறைகள்தான் வேறு.

ராமனின் வழியை பின்பற்றவேண்டும்; கிருஷ்ணணின் பேச்சை கேட்கவேண்டும். இதுதான் சாரம்.

பித்ருவாக்ய பரிபாலனம் என்னும் தாய்- தந்தை சொல்கேளல், அனை வரையும் சகோதரனாக ஏற்றல் (உதாரணம்-சுக்ரீவன், குகன், விபீடணன்), மனையாளே ஆனாலும் மற்றவரால் குறைசொல்லப்பட்டால் அவள் மாசற்றவள் என்பதை_உணர்த்த தீக்குளிக்க வைப்பது என்பவை ராமனின் தர்மம். தாத்தா பீஷ்மர், குல குரு கிருபர்சாரியர் , ஆசிரியர் துரோணர், சகோதரர்களான துரியோதனா தியர்கள் அனைவரும் அதர்மத்தின்பக்கம் நின்றதால், அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்கலே என்றான் கிருஷ்ணன்.

முடிவில் இரண்டு காவியங்களும் தர்மத்தை நிலை நாட்டவே எழுதப்பட்டு இன்றைக்கும் பேசப்படுகின்றன. ஆனால் மகாபாரதத்திற்கு மட்டும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. புல்லையும் புண்ணாக் கையும் தின்று வாழும் பசு, தனது குருதியால் நல்ல பாலைத்தருகிறது.

அந்தப் பாலில் இருந்து தயிர் கடைகிறோம்; தயிரிலிருந்து வெண்ணெயும், அதிலிருந்து நெய்யை யும் பெறுகிறோம். அதேபோன்று மகாபாரதம் எனும் இதிகாசத்தில் இலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நூலையும்; பகவத் கீதை எனும் மிக அற்புதமான கடவுள வாக்கினையும்; பிறகு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் நாம் படிக்கநேர்கிறது. இது மகாபாரதத்தின் கதைப் போக்கில் தானாகவே நிகழும் ஓர்அற்புதம். குறிப்பாக பகவத்கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுடவாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும். இந்த பகவத்கீதை மகா பாரதத்தில் வெகுவாக சொல்லப் பட்டாலும், பகவானான மகாவிஷ்ணுவால் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரால் சூரியபகவானுக்கு இது போதிக்கப்பட்டது. பிறகு சூரிய பகவானின் சீடர்களின் மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டது.

"இமம் விஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இஷ்வாகுவே அப்ரவீத்'

என்பது சுலோகம். இதில் விவஸ்வான் என்பது சூரிய தேவனை குறிக்கும். "கடவுளே இந்த கீதையை சூரியபகவான் மூலமாக மனிதகுலத்தின் தந்தையான மனுவிற்கும், மனு இஷ்வாகுவிற்கும் உபதேசம்செய்தனர்' என் கூறுகிறார் கிருஷ்ணர். இதில் இஷ்வாகு என குறிப்பிடபடுபவர் ஸ்ரீராமனுக்கு மூதாதையர் ஆவார்.

இப்படி சிலயுகங்களில் ஓதப்பட்ட அல்லது உணர்த்தப்பட்ட பகவத்கீதை பல காலங் களில் தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாலும், உண்மையான கருத்துகள் சிதைந்ததலும் மீண்டும் ஸ்ரீகிருஷ்ணர் போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததாக கிருஷ்ண பரமாத்மாவே கூறுகிறார். இதுவே இன்றுவரை நிலைத்து கொண்டிருக்கிறது. இன்று கூட பகவத்கீதையின் சரியான உள்ளர்த்தத்தை உணராத பண்டி தர்களும் நம்மிடையே உண்டு.

ஒரு சமயம் ஷீரடி சாய் பாபாவின் காலை வலி தீர வருடிக்கொண்டும் பிடித்துக்கொண்டும் இருந்தார் மகாபண்டிதரான ஒரு பிராமணர். அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், வாய் ஏதோ சுலோகங்களை சொல்லிக்கொண்டிருந்தது. ""என்ன சுலோகத்தை சொல்லி கொண்டிருக்கிறாய்?'' என கேட்டார் பாபா.

""பாபா… நான் பகவத்கீதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன்…'' என்றார் அந்தபண்டிதர். உடனே பாபா அவர் மனத்திற்குள் கூறிய சுலோகத்தை சொல்லி, ""இதைத்தானே சொல்லி கொண்டிருக்கிறாய்?'' என கேட்டார். அந்த பண்டிதருக்கு வியப்பு தாளவில்லை. தான் மனத்திற் குள்ளேயே முணு முணுத்து கொண்டிருந்த சுலோகம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தார்.

""சரி; அதற்கு பொருள் கூறு'' என்றார் பாபா, பண்டிதரும்_கூறினார்.

""தவறு.. தவறு… நீ சொன்னபதில் தவறு. அதுதான் உண்மையான பதில் என நீ நினைத்து கொண்டிருக்கிறாய். ஸ்ரீவியாசர் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்கமாட்டார்'' என சொல்லி, சரியான பொருளைக்கூறி அந்த வேதபண்டிதரை மேலும் வியக்கவைத்தார் பாபா.

அப்படித் தான் சூரிய பகவானுக்கு ஆதிகாலத்தில் உபதேசிக்கப் பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டாலும், பலசமயங்களில் சரியான பதில் சொல்லப் படாததாலும், ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டாம் முறையாக அர்ஜுனன் மூலமாக உபதேசித்தார்.

இதை நவீனயுகத்தில் Information Sharing என்கிறார்கள். இப்படி ஒருவிஷயம் யுகயுகாந்தரமாய் நம்மிடையே தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

உங்களுடைய நண்பர் ஒருவரை கூப்பிடுங்கள். நீங்கள்சொல்வதை கவனமாக கேட்கச்சொல்லுங்கள். உங்கள்பெயர், பிறந்த ஊர், உங்கள் பெற்றோர்பெயர், உங்கள் படிப்பு, நீங்கள் பணிபுரியும் அலுவலகம், உங்கள் மனைவி, குழந்தைகள்பெயர், நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் குழந்தைகள் படிக்கும்_பள்ளியின் பெயர்- இவ்வளவையும் அவரிடம் சொல்லிவிட்டு, இதை அப்படியே அவரை மீண்டும் சொல்லச்சொல்லுங்கள். நிச்சயமாக மேற்கண்டவற்றில் இரண்டு மூன்று விஷயங்களை அவரால் திரும்பச்சொல்ல முடியாது. . இதே போல அவர் உங்களிடம் சொல்லியிருந்தாலும் நீங்களும் சிலவற்றை மறந்திருப்பீர்கள்.

இதே போல்தான் விவஸ்வான் எனும் பெயருடைய சூரியபகவானுக்கு ஸ்ரீ கிருஷ்ணரால் சொல்லப்பட்ட பகவத்கீதை பலரால் கற்கப்பட்டு சரியானபொருள் சில சமயங்களில் சிதைக்கப் பட்டதால், மீண்டும் ஒரு முறை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார் ஸ்ரீகிருஷ் ணர். இதுவே கீதை பிறந்த கதை!

ராமாயணம் மஹாபாரதம், மஹாபாரதம் பேசுகிறது,

Leave a Reply