காஞ்சிபுரம் மாவட்ட தே மு தி க சார்பில், பக்ரீத் குர்பானி வழங்கும் விழாநடந்தது. அதில் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது

பக்ரீத் பண்டிகை நோக்கமே இருக்கிறவர்கள் இல்லாதவருக்கு கொடுக்கணும் என்பது. அதை நான் பின்பற்றி வருகிறேன். நான் பேசினால் திமுக,விற்கு கோபம் வருது. உலக அளவில் இது-வரை இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூ ஊழல் நடந்துள்ளதாக கூறிய குற்றசாட்டின் பேரில் ராஜா பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஊழல் செய்ததன்மூலம் கிடைத்த பணத்தை திரும்பக் கொடுக்கனும் ஏனென்றல் அது மக்களின்-வரி பணம். ராஜினாமாவிற்கு பிறகு சென்னைத் திரும்பிய ராஜாவை வரவேற்க தி மு க.வினர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். காவிரியில் தண்ணீர் விடாததை கண்டித்து அவர் என்ன ராஜினாமா செய்தாரா, பாலாற்றின்-குறுக்கே அணைக் கட்டுவதை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தாரா, முல்லை பெரியாறு பிரச்னைக்கு ராஜினாமா செய்தாரா, இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு ராஜினாமா செய்தாரா?

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவருக்கு முதல்வர் பதவி-மீது ஆசை என்கிறார் துணை-முதல்வர் ஸ்டாலின. நீங்கள் என் துணை-முதல்வராக ஆசை படவில்லையா? ஆசை படவில்லை என்றால் பதவியை கோ.சி.மணிக்கோ,அன்பழகனுக்கோ, ஆற்காடு வீராசாமிகோ கொடுத்திருக்கலாமே. இல்லையென்றால் மூத்தவர் அழகிரிக்காவது கொடுத்து இருக்கலாமே. உங்களுக்கு ஆசை இருக்கலாம், எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? .இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Leave a Reply