எனது நாட்டை சேர்ந்த இளைஞர் ரோஹித், தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதத் தாய் தனது ஒரு மகனை இழந்து விட்டார். அவரது தற்கொலைக்கு காரணங்கள் இருக்கலாம்; அதைச்சுற்றி, அரசியல் இருக்கலாம். ஆனால் இதில், ஒருதாய் தனது மகனை இழந்து விட்டார் என்பதே உண்மை. அந்த வேதனையை நானும் உணர்கிறேன்.

 21-ஆவது நூற்றாண்டில் இந்தியா தான் உலகிலேயே இளமையான நாடு என்று தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்கள் வேதனையை தருகின்றன. புதிய உற்சாகம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நோக்கியபாதையில் நாட்டைக் கொண்டு செல்ல விரும்புகிறோம். அம்பேத்கர் கண்ட கனவை நோக்கிய வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்கான தொடர் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

அம்பேத்கர் இந்தநாட்டுக்காக பல்வேறு தியாகங்கள் செய்துள்ளார். கல்வியில் புரட்சிசெய்துள்ளார். அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அவரது சமூகபணியில் இருந்து அவர் விலகவில்லை.

உயர்ந்த எண்ணங்கள், தொலை நோக்கு எண்ணம் கொண்டவராக வாழ்ந்தார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர் மனம் தளரவில்லை. அம்பேத்கர் ஏழைகளுக்காக, தலித் மக்களுக்காக உழைத்தார். இந்த நாட்டிற்காக வாழ்ந்து இந்தநாட்டிற்காக உயிரை துறந்த சிறந்த சிந்தனையாளர்.

மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவு தூரம் கற்கிறீர்களோ அந்தளவிற்கு வாழ்வில் எந்த சவாலையும் சந்திக்க முடியும். தோல்விகளே வெற்றியின் அடிக்கல்லாக அமையும் .மாணவர்கள் ஊக்கம் இழக்காமல் உழைக்க வேண்டும்.

லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியது

Leave a Reply