மத்திய அரசு தேசிய தொலைத் தொடர்பு கொள்கை 2011 வரைவுத் திட்டத்தை திங்கள்கிழமை வெளியிட்டது . அதில், ரோமிங் கட்டணம் விரைவில் ரத்துசெய்யப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் இந்தியாவிற்குள் எந்த ஒரு மாநிலத்திலிருந்தும், வேறொரு மாநிலத்தில் உள்ள எந்த செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறினாலும் செல்போன் எண்ணை மாற்றாமல் தக்கவைக்கும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொலைத் தொடர்பு கொள்கை 2011 வரைவுத் திட்டம் ‘ஒரே நாடு – ஒரே உரிமம்’ என்ற கொள்கைக்கு வழிவகை செய்கிறது. நம் நாட்டில், 22 தொலைத் தொடர்பு வட்டங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வட்டத்தின் செல்போன் சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர், வேறொரு வட்டத்திற்கு சென்று பேசும்போது, அவரிடம் ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, அடிக்கடி வெளிïர் பயணம் செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சினை.

தற்போதுள்ள நிலையில், செல்போன் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு வட்டத்திற்கு தனி உரிமம் பெற வேண்டும். புதிய கொள்கைப்படி, நாடு முழுவதையும் ஒரே வட்டமாக அறிவித்து, ஒரே உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய ரோமிங் கட்டணம் ரத்தாகும். மேலும், வாடிக்கையாளர்கள் இந்தியாவிற்குள் எந்த இடத்திற்கு மாறினாலும், செல்போன் எண்ணை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

Tags:

Leave a Reply