சதானந்தகெளடா கர்நாடகவின் புதிய முதல்வராக பாரதிய ஜனதா எம்எல்ஏ,க்களால் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 120பேரில் 68 பேர் சதானந்த கெளடாவுக்கு ஆதரவாக வாக்களிதனர்.முன்னதாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா எம்எல்ஏ,களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது .

சதானந்த கெளடா, ஜகதீஷ் ஷெட்டர் இருவரில் ஒருவரை முதல்வராக_தேர்ந்தெடுக்க எம்எல்ஏக்கள் கூடி தங்களது வாக்குகளை_பதிவுசெய்தனர். இதில் 68எம்எல்ஏக்கள் சதானந்த கெளடாவுக்கு ஆதரவளித்ததால் புதிய முதல்வராக அவர் விரைவில் பதவியேற்கிறார் .

Tags:

Leave a Reply