சென்னையில் வடபழனி ஆலயத்தின் அருகில் மூன்று சித்தர்கள் சமாதிகள் உள்ளன. யார் அந்த மூன்று சித்தர்கள்?
வடபழனி ஆண்டவன் என்று அழைக்கப்படும் அண்ணாசாமி தம்பிரான் என்கின்ற சித்தரின் உண்மையான பெயர் அண்ணாசாமி நாயக்கர். அவருக்கு கடவுள் பக்தி அதிகம்;. அவருக்கு சிறு வயது முதNயே தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். ஒரு ஆலயத்தில் மயங்கிக் கிடந்தவரை

சந்தித்த சாது ஒருவர் அவரை பழனிக்குச் சென்று முருகனை வழிபட்டால் உபாதை தீரும் எனக் கூற பழனிக்குச் செல்ல காசில்லாமல் திருப்போர், திருத்தணி போன்ற இடங்களில் இருந்த முருகன் ஆலயத்துக்குச் சென்று வணங்கினாராம்.

திருத்தணியில் தன் நாக்கையே வெட்டி முருகனுக்குக் காணிக்கையாகப் போட்டப் பின் மயங்கி விழுந்தார். முழித்து எழுந்தவர் ஞானம் பெற்றார். முருகனின் படம் ஒன்றை பெற்றுக் கொண்டு வடபழனிக்கு வந்து தங்க அவருடைய நாக்கும் சரியாகியது. அருள் வாக்கு கூறத் துவங்கினார். பழனிக்குச் சென்றார். பல சித்தர்களிடம் இருந்து சக்திகளைப் பெற்று வந்தார். வடபழனிக்கு வந்து பழனி ஆண்டவனை தான் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து அருள் வாக்குக் கூறியும், பல சக்திகளைக் கொண்டும் தமது பக்தர்களுக்கு நன்மைகள் செய்து வந்தார்.

அவர் மறைந்தப் பின் 1863 ஆம் ஆண்டு அவரிடம் வந்த இரத்தினசாமி செட்டியார் என்பவர் அவரிடம் இருந்து உபதேசம் பெற்று சித்தரானார். தன்னுடைய குருவின் மறைவிற்குப் பின்னர் இரத்தினசாமி தம்பிரான் என அழைக்கப்பட்ட அவர் குரு விட்டுச் nசென்ற பூஜைகளையும் அருள் வாக்கு கூறுவதையும் தொடர்ந்தார். அவர் வடபழனி ஆலயம் வளர்ச்சி அடைந்ததில் பெரும் பங்கு ஆற்றியவராம்.

1886 ஆம் ஆண்டு அவர் சமாதி அடைந்ததும் நெசவுத் தொழிலில் இருந்து வந்த அவருடைய சீடரான சித்தர் பாக்கியலிங்கத் தம்பிரான் அவர்கள் தமது குருவின் பணிகளையும் அருள் வாக்கையும் தொடர்ந்தாராம்.அவரும் 1931 ஆம் ஆண்டு சமாதி அடைய சித்தர் பீடம் ஒன்றை வடபழனியில் குமரன் சில்க் சார்;பில் அமைத்து உள்ளனராம்.

அவர்கள் வழி வந்த குருஜி எனப்படும் வரதராஜனார் அந்த மூன்று சித்தர்களும் அவர் முன் தோன்றி கட்டளை இட்டதிற்கேற்ப அங்கு ஒரு ஆலயம் அமைத்து அருள்வாக்கும் கூறி வருகின்றாராம். குருஜி ஞாயிற்றுக் கிழமை அன்று மூன்று சித்தர்களுக்கும் சித்த பீடத்தில் பூஜை செய்து அன்னதானமும் செய்து வருகின்றாராம். அனைவரும் ஒரு முறையாவது செல்ல வேண்டிய சித்தர்பீடம் இது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply