பொன்னி ஆறு பாயும் சோழவள நாட்டைப் புகார் நகரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்ட 'கண்டன் ' என்னும் சோழ வேந்தன், வெண்குட்டத்தால் பாதிக்கப்பட்டான். அறவோர்கள் சொற்படி சிவத்தலப் பயணம் மேற்கொண்டு இராமேசுவரம் செல்லும் வழியில், வீரவனத்தை (இன்றைய சாக்கோட்டை) அடுத்த மேற்குப் பகுதியில் இருந்த பெருங்காட்டில் மடம் ஒன்றில் படைகளோடு தங்கியிருந்தான். வீரவனத்தில் எழுந்தருளிய வீரசேகரப் பெருமான் என்ற திருமுடித தழும்பர், சிவபெருமான் அருளால் நோய் நீங்கப் பெற்றான்.

 

சோழன் கண்டன், கோயில் திருப்பணி செய்தான். அந்த கானச்சோலையில் மனைவியோடு நிலையாகத் தங்கி, வீரசேகரப் பெருமானையும், உமையம்மையையும் வணங்கி வரலானான். காட்டை நாடாக்கி, வீடுகள் அமைத்துப் பலரைக் குடியேற்றினான். தன் பெயர் வரலாற்றில் விளங்கத் தக்க வகையில் 'கண்டன்ஊர்' எனப் பெயரும் இட்டான். இவ்வாறு உருவான கண்டனூருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டியிலிருந்து, பெரியகருப்பன் செட்டியார் என்ற குப்பான் செட்டியார் வந்து குடியேறினார்;. அங்கு வந்து முதன் முதலில் குடியேறிய குடும்பங்களில் அருளாடியார் குடும்பமும் ஒன்று. கண்டனூருக்கு வாய்த்த பல பெருமைகளுள் குறிப்பிடத்தக்கது, இரணிக்கோயில் பிரிவைச் சேர்ந்த பழநிக் கோயில் அருளாடி, குட்டையன் செட்டியார் (சாமியாடிச் செட்டியார்), பெரியகருப்பன் செட்டியாருக்கு மகனாகப் பிறந்ததாகும்.

 

கடவுள் பணி செய்யும் பெருமையைக் கருவிலே திருவாகப் பெற்ற குட்டையன் செட்டியார், அடியார் கனவில் பழநியாண்டவரால் அறிமுகம் செய்யப்பெற்ற அருளாளர். பழநிக்கு; காவடியெடுத்தும். பழநி ஆண்டவரின் திருவருளால், அடியார் துயர் தீர்த்தும், பழநிக் கோயில் பயணத்தைத் தொடங்கி வைத்தும் கடவுள் பணிக்குக் கால்கோள் செய்த கண்டனு}ர் நாயனார்தான் குட்டையன் செட்டியார்.

ஆண்டவன் செய்து வைத்த அறிமுகம்„ நெற்குப்பைக் குமரப்பச் செட்டியாருக்கும், குறுநில மன்னர்களுக்கும் கனவில் பழநியாண்டவர் தோன்றி, " கண்டனூரில் இருந்து குட்டையன் என்பவன் காவடி எடுத்து வருவான். அவனை எதிர் கொண்டு அழையுங்கள், அடியார் கலி தீர்ப்பான்" என்று கூறினார். பழநியாண்டவர் கட்டளைப்படி, கண்டனூரை விட்டுக் காவடி தூக்கிப் புறப்பட்ட குட்டையன் செட்டியார், குன்றக்குடி வழியாகப் பழநியை அடைந்தார், இடும்பன் குளத்தில் காவடியை இறக்கி வைத்தார். பூசைகளை முடித்து மலைப்பிரகாரத்தில் அருளோடு காவடி ஆடிவரும் போது, நெற்குப்பைக் குமரப்ப செட்டியாரும், வை காவூர் நாட்டுச் சிற்றரசர் விஜயகிரி வேலாயுதத்துரை அவர்களும் நகரத்தார் நல்லடியார் பலரும் குட்டையன் செட்டியாரை இடும்பன் மலை அடிவாரத்தில் விருது வாத்தியங்களுடனும், மரியாதையுடனும் எதிர் கொண்டு அழைததனர். குட்டையன் செட்டியார், வைகாவூர் மன்னரைப் பார்த்து 'மூன்று நாளைக்கு முன்னதாக உன் கனவில் பழநி ஆண்டவர் காட்சி தந்து ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு வையாபுரித்துரை என்று பெயர் வை என்றதும் நினைவிருக்கிறதா?' எனக் கேட்டார்.

வைகாவூர் மன்னர் அருளோடு நிற்கும் குட்டையன் செட்டியாரிடம், அவரது ஆற்றலை வியந்து தமது செங்கோல் பிரம்பைக் கையில் தந்தார். மேலும் அவருடன் அன்னதான மடத்திற்கு வந்த அரசரிடம், ஆறுகால் சவுக்கையில் ஏறி நின்று, " எனக்காக அரண்மனையிலிருந்து 700 பொன் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாய். இன்னும் 300 பொன் எடுத்துக் கொண்டு பட்டத்து அரசியையும் அழைத்து வர ஆள் அனுப்பி இருக்கிறாய்" என்றார். அரசர் ஆனந்தக்கண்ணீர் விட்டார். அருள் வாக்குக் கேட்ட அரசியிடம் பிள்ளைப் பேற்றைப் பற்றிச் சொல்லி, காணிக்கையாக அரசியின் வலம்புரிச் சங்கைக் கேட்டார்.

மெய்ப்பொருள் உணர்ந்த குட்டையன் செட்டியார், தன் கைப்பொருளாகிய வலம்புரிச் சங்கை அறிந்தது கண்டு வியந்து, பணிந்து காணிக்கையாக்கினார். அரசரும் தனது கழுத்தில் சுடர் விட்ட சந்திரஹhரத்தைக் கழற்றி, பொருளரசர் கழுத்திற்குச் சுமையாக இருந்த இம்மாலை அருளரசர் மணிக்கழுத்தில் விளங்கட்டும் என்று காணிக்கையாக்கினார். செங்கோல் பிரம்பும், வலம்புரிச் சங்கும், சந்திரஹhரமும் குட்டையன் செட்டியாரின் அருளாற்றலுக்குச் சான்றhக இன்றும் இருந்து வருகின்றன.

மருதிருவர் மனமறிந்த அருளாடியார்„

பங்குனி உத்திரத்துக்குக் குன்றக்குடிக்குக் காவடி எடுத்து வந்த குட்டையன் செட்டியாரை மருதுபாண்டிய சகோதரர்கள் சோதிக்க எண்ணி, நாங்கள் நினைத்ததைச் சாமி சொல்ல வேண்டும் என்றனர். " நீங்கள் நினைத்தபடி பிரான் மலையும், எசரிவளத்தான் மலையும் ஒன்றாகக் கூடாது " என்றார். மற்றோரு கேள்வி என்றதுமே, கேட்கவிருப்பதை அறிந்து, மந்திரிகையில் வெற்றிலை மடித்து வைத்திருக்கிறார் என்றார். இதனால் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த மருது பாண்டியர் தங்கள் கையில் வைத்திருந்த மோதிரத்தை அளித்தனர். வேறெதுவும் வேண்டுமானால் கேட்கவும் என்றதும், அருளாடியார் அரண்மனையிலிருந்த யானைத் தந்தங்கள் இரண்டையும் காணிக்கையாக்குமாறு பணிந்தார். அவை இன்றும் சான்றாக உள்ளன.

நோய் தீர்த்த குட்டையன் செட்டியார்„

குன்றக்குடிக்கும் காரைக்குடிக்கும் இடையில் உள்ள பாதரக்குடியில் நகரத்தார் ஆண்கள் குருபீடமாக விளங்கிய குருமகா சன்னிதானத்திற்கு ராஜபிளவை நோய் ஏற்பட்டது. பார்க்காத மருத்துவம் இல்லை. கண்டனு}ர் குட்டையன் செட்டியாரின் அருளாற்றலைக் கேள்விப்பட்ட குருமகா சன்னிதானம், அவர் வந்து திருநீறு இட்டால் நோய் தீர்ந்துவிடும் என்று தகவல் அனுப்பினார். தகவல் அறிந்த குட்டையன் செட்டியார், " நகரத்தார் அனைவருக்கும் குருவாக விளங்கும் குருபீடத்திற்கு நாம் திருநீறு கொடுப்பதா ' என்று தயங்கினார். அதற்கு குருபீடம் " நீ பழநி ஆண்டவர் அருள் பெற்றிருப்பதால் திருநீறு இடலாம்" எனக் கூறினார். அவ்வாறே குட்டையன் செட்டியாரும் குருபீடத்துக்கு திருநீறு தந்தவுடன் நோய் தீர்ந்தது.

நோய் தீர்த்த குட்டையன் செட்டியாருக்கு தம் நன்றிக் கடனைச் செலுத்தக் குருபீடம் நினைத்தார்;. கிளாமடத்தைச் சேர்ந்த குட்டையன் செட்டியார் தனக்கென்று எதுவும் வாங்காதவர். இதை அறிந்த குருபீடம் நகரத்தார்களிடம் சொல்லி ஆண்டுதோறும்  தரக்குடியிலிருந்து கண்டநூர் குட்டையன் செட்டியாருக்குப் பொங்கல் பானை அனுப்பி வைக்கும் மரியாதையை ஏற்படுத்தினார்கள். இன்றும் பாதரக்குடி நகரத்தார் ஆண்கள், குருபீடத்திலிருந்து குட்டையன் செட்டியார் குடும்பத்துக்கு பொங்கல் பானை அனுப்பி வைக்கும் பெருமை தவறாமல் நடக்கிறது.

குட்டையன் செட்டியார் கண்டநூரிலேயே முக்தி அடைந்ததும், அவர்கள் விருப்பப்படி சமாதி எழுப்பி அதிஷ்டானத் திருக்கோயில் அமைக்கப்பட்டது. பாதரக்குடியிலிருந்து ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு வரும் பொங்கல் பானையைக் கொண்டு குட்டையன் செட்டியார் சமாதியில் முதலில் பொங்கல் வைத்துப் பால் பொங்கிய பிறகு தான் அருளாடியார் வகையறா வீடுகளில் பொங்கலிடுவது வழக்கம். அது இன்று வரை தொடர்கிறது. ஆண்டு தோறும் பழநிப் பாதயாத்திரைக்குச் செல்லும் போது குட்டைய ஐயா அதிஷ்டான திருக்கோயிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து வணங்கி அவருடைய ஆசீர்வாதத்தையும், உத்தரவையும் பெற்று அருளாடியாரும் பாதயாத்ரிகர்களும் செல்வது வழக்கம். அப்போது குட்டையன் செ ட்டியார் அவர்கள், அருளாடியருடன் அருவமாக இணைந்து கொள்வதாக ஐதீகம். அதற்குச் சான்றாக அருளாடியார் குட்டையன் செட்டியார் பழநிக்கு எடுத்துச் சென்ற கைப்பிரம்பை இன்றும் எடுத்துச் செல்கிறார்கள்.

Leave a Reply