உலகப் புகழ்பெற்ற மார்க் ட்வைன் என்கிற பேரறிஞர் தனது 10 பாகங்கள் அடங்கிய "உலக நாகரீகங்கள்' என்ற நூலில் "பாரத நாடு மனித குலத்தின் தொட்டில், மொழி தோன்றிய இடம்'' என்று வர்ணித்திருக்கிறார். வில்லியம் டுயூரான்ட் என்பவர் இதையே, "பாரதம் மனித குலத்தின் தாய் நாடு, சம்ஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளுக்குத் தாய்'' என்று விமரிசித்தர்.

மேற்கத்தியர் நமது பெருமைகளை சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு அப்போது தெரிந்த கிரேக்க நாகரீகம் என்பதால் இதையும் அதோடு ஒப்பிட்டு வந்தனர். ஆனால் அதற்கும் பழமையான எகிப்து, மெசபடேமியா நாகரீகங்கள் வெளிச்சத்திற்கு வர அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

பாரதத்தை மேற்கில் அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றிய மேக்ஸ் முல்லர் என்கிற ஜெர்மானியர், "வேதங்கள் உலகில் எல்லாவற்றிலும் முதன்மையான நூல்கள். எவ்வளவு பழமை யானவையென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலத்தை சேர்ந்தவை!'' என்றார். ஸ்டீபன்க்னாப், ஜேம்ஸ் கூப்பர் என்பவர்கள், வேத காலத்து நாகரீகம் உலகம் முழுவதும் பரவியிருந்ததற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி நிரூபித்திருக்கிறார்கள்.

மொஹஞ்தாரோ மற்றும் ஹரப்பாவில் (பழைய சிந்து சமவெளிப் பிரதேசத்தில்) புராதத்துவ நிபுணர்களால் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் உலகத்தையே அதிசயிக்க வைத்திருக்கின்றன. நமது பண்டைய காலத்து நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு சீனாவிலிருந்து ஹீவான் சுவாங் போன்ற பேரறிஞர்கள் வந்தனர். அன்று கல்வி, தொழில் நுட்பம், வாணிபம், விஞ்ஞானம், கலை, கலாச்சாரம் என்று எல்லாத் துறைகளிலுமே பாரதம் ஓங்கியிருந்தது. இதுதவிர, மௌரிய சாம்ராஜ்யம், குப்த சாம்ராஜ்யம், விஜயநகர சாம்ராஜ்யம், சாளுக்ய சாம்ராஜ்யம், சோழ சாம்ராஜ்யம், சங்க காலம் என்ற நமது சரித்திரத்தில் பல பொற்காலங்கள் இருந்தன. இன்று நம் நிலைமை என்ன?

கடவுள் தனது படைப்புகளிலேயே மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைப் புகட்டினார். நம் முன்னோர்கள் அந்தப் பகுத்தறிவைப் பண்படுத்தி, மேலும் கூர்மையாக்கி மனிதகுலம் தழைக்க, ஆரோக்கியமாய் வாழ வழிமுறைகள் வகுத்துத் தந்தனர்.

உடலுறுப்புகளின் செயல்பாடுகளை நன்கு அறிந்து, உகந்த உணவை தெரிந்தெடுத்தனர். வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்தனர். மருத்துவம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், கல்வி, கலாச்சாரம், வானியல் (விண்வெளி, புரவெளி), விண்வழிப் போக்குவரத்து என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர்கள் செய்த நல்ல காரியங்களை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை உபயோகித்து அந்நிய நாடுகள் வளம் பெற்று வருகின்றன. விண்வெளி நுணுக்கங்கள் அடங்கிய சுமார் 60,000 ஓலைச்சுவடிகளை அமெரிக்க நாசா  என்ற நிறுவனம் காரணமில்லாமலா தன் வசம் வைத்துக் கொண்டு ஆராய்ந்து வருகிறது? நமது பல அரிய பொக்கிஷங்கள் ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் பதுங்கியிருப்பதாகக் தெரிய வருகிறது.

கோள்கள் தட்டையான சுழல் பாதையில்  வலம் வருகின்றன என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை மேற்கத்திய விஞ்ஞானி காப்பர்நிக்கஸ் 16 ஆம் நூற்றாண்டில் விரிவாக ஆராய, ஜே. கெப்ளர் என்பவர் 1609ல் உறுதி செய்தார். ஆரியப்பட்டர் 499ம் ஆண்டு கிரகணங்களைப் பற்றி "சந்திரன் சூரியனை மறைக்கும் போது சூரிய கிரகணமும், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது சந்திர கிரகணமும் நிகழ்கின்றன''  என்று எழுதியுள்ளார். ஆங்கிலேயர்கள் இதை 17ம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்தனர்.

விதையற்ற காய்கறிகள், பழங்கள் பயிர் செய்வது எப்படி, தாவரங்களை பூச்சிகளிடமிருந்து காப்பது எப்படி, என்றெல்லாம் 13ம் நூற்றாண்டிலேயே' உபவனவினோத' என்ற நூலில் காணலாம். ரத்தம் எவ்வாறு தயாராகிறது, எவ்வாறு தமனிகள் மூலம் உடலுறுப்புகளுக்கு சென்று பராமரிக்கிறது என்றெல்லாம் சுசுருதர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார். ரிக் வேதத்தில் டெஸ்ட் டியூப் பேபியைப் பற்றி கொள்ளுங்களேன்! பூஜ்யம் என்ற எண்ணை நாம் தானே உலகிற்குக் கொடுத்தோம்? அது இல்லாமல் கணிதம் வளர்ந்திருக்குமா? விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா? கம்ப்யூட்டர் தான் வந்திருக்குமா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கர்நாடக மாநிலத்தில் உள் மேல் கோட்டை என்கிற ஊரில் நடந்து வரும் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்த உண்மைகள் இவை. இங்கு மேற்கத்தியர் நிறைய பேர் வந்து போகிறார்கள்.

நம் முன்னோருடைய எல்லா செயல்பாடுகளுமே சூழ்நிலையியலுக்கு சாதகமாகவே இருந்தன. நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் அது நம்மைக் காப்பாற்றும் என்று சாஸ்திரங்கள் கூறியபடி வாழ்ந்து காட்டினார்கள். நமது வீட்டிலிருந்து கழிவுப் பொருள்களை நிலத்திற்குத் திரும்ப கொடுத்தனர். அது இயற்கை உரமாக மாறி, நிலவளம் பெருகி அதன் பயன் நமக்கேக் திரும்பக் கிடைத்தது. மீதமிருந்த, தேவையற்ற காய்கறிக் கழிவுகளைக் கால் நடைகளுக்குக் கொடுத்தோம். இன்று இவையெல்லாம் எங்கோ நதியில், கடலில் கொட்டப்படுகின்றன. மாடுகளுக்கும் இன்று ரசாயனம் கலந்த உணவுதான். நாம் நமது ஒரிஜினாலிடியை இழந்தது போல் இவைகளுக்கு இயற்கைத் தன்மையை இழந்து நிற்கின்றன.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் துருக்கி நாட்டில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அங்கு ஒரு ஆட்டு மந்தை மலைப் பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. கவனக்குறைவால் ஒரு ஆடு மலை விளிம்பிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக குதித்தன. இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆடுகள் இறந்த போயின. இயற்கை தந்த சொந்த மூளையை உபயோகிக்காமல் மற்றவர்களின் 'கார்பன் காப்பி' யாக ஆவதை 'ஆட்டு மந்தை புத்தி' (ழநசன iளேவinஉவ) என்று குறிப்பிடுகிறார்கள். நா செய்து வருவதும் இதுதான்.

எனது மனம் ஓய மாட்டேன் என்கிறது. ஒரு சமயம் உலகத்தின் சிகரத்தில் இருந்த நாம் ஏன் இப்படியானோம்? நம் முன்னோர்கள் எதிர்த்தனர். அதையும் மீறி பல நல்ல வழிகளை ஏன் உதறித் தள்ளினோம்? உணவு வழக்கத்தை ஏன் மாற்றிக் கொண்டோம்? நல்லெண்ணெய்க்கு ஏன் முழுக்கு போட்டோம்? எண்ணெய்க் குளியலுக்கு ஏன் விடை கொடுத்தோம்? இவ்வாறு பல கேள்விகள் …! பார்ப்பவர்களையெல்லாம் கேட்கிறேன். ஆனால் ஒருவரிடமிருந்தும் உருப்படியான பதில் கிடைக்கவில்லை.

கட்டுரையின் ஆரம்பத்தில் நமது சம்ஸ்கிருத மொழியைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளேன். இங்கு நேரடியாகவே வருகிறேன். வேதகாலத்து நாகரீகம் உலகம் தழுவி இருந்தது என்றால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர்க்கென்று ஆகும்? ராமாயண காலத்தில் தேரோட்டி, படகோட்டி, சபரி, வானரர், வீபிடணன் என்று எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேசியிருக்கிறார்கள். மஹாபாரதத்தலும் அப்படியே, விண்வெளியியல், வானியல், வேளாண்மை, மருத்துவம், சங்கிதம், பரதம், மெடலர்ஜி (உலோகவியல்) என்று எல்லாத்துறைப் புத்தகங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. இவையெல்லாம் குறிப்பிட்ட ஒரே வர்க்கத்தினருக்கு என்று எப்படி ஆகும்? (புத்த மதம் தோன்றிய போது அவரது மதப் புத்தகங்கள் முதலில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. பிறகு பாலி என்கிற மொழியில் எழுதப்பட்டன. பின்னர் பாடப் புத்தகங்களின் பிற மொழிகளிலும் வர ஆரம்பித்தன). இங்கு சுவாமி விவேகானந்தர் கூறியதையும் சொல்லி விட்டால் எனக்கு நிம்மதி. சிறுபான்மையினர் அவசியம் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் மேம்பட வேண்டும் என்றார்.

நம் முன்னோர்கள் சிறந்த அறிவுஜீவிகளாக இருந்ததற்கு, நமது பண்டைய நாகரீகம் வானளாவ தழைத்து நின்றதற்கு சம்ஸ்கிருதம் ஒரு முக்கிய காரணம். இது அசைக்க முடியாத நம்பிக்கை. மேற்கத்திய நாடுகளில் நடந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த மொழியைப் படிப்பதனால் மூளை திறனுடன் செயல்படுகிறது என்று  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் நகரத்து ஜேம்ஸ் ஜீனியர் பள்ளி இதையே அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறது. அங்கு 1975லிருந்து சம்ஸ்கிருதம் விருப்பப் பாடமாக  சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. சம்ஸ்கிருதம் விரும்பிப் படித்த மாணவர்கள் எல்லா பாடங்களிலுமே அதகி மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்த முன்னணியில் இருந்தனர். இதைக் கண்ட பள்ளி நிர்வாகம் சம்ஸ்கிருதத்தை இப்போது கட்டாயப் பாடமாக ஆக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அயர்லாந்தும் அவ்வாறே செய்துள்ளது. உலக அளவில் 17 நாடுகளில் அநேக பல்கலைக் கழகங்களில் இந்த மொழியில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

சம்ஸ்கிருத மொழியின் உச்சிரிப்பினால் நாவில் உள்ள எல்லா நரம்புகளும் இயங்குகின்றன. உடலின் பல்வேறு ஆற்றல் மையங்களும், ஊக்குவிக்கப்பட்டு உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது என்று தெரிய வருகிறது. இதனால் ரத்த ஒட்டம் மேம்படுகிறது. இயற்கையான எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. இறுக்கம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. ஆரோக்கியம் சீர்படுகிறது.

வீணாகக் குழம்பாதீர்கள்! நான் 60 வயதிற்கு மேல்தான் சம்ஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தேன் நீங்களும் படியுங்கள். குழந்தைகளையு படிக்கச் செய்யுங்கள். அதனால் முன்னவர் பெற்ற, மற்றவர் பெற்று வரும் நன்மைகளை நாம் திரும்பப் பெறுவோம். கடவுள் தந்தது பகுத்தறிவா, ஆட்டு மந்தை புத்தியா? சற்று சிந்தியுங்கள்!

சம்ஸ்கிருதம், சமஸ்கிருதம் என்பதன் பொருள், சமஸ்கிருதம் இந்தியா, சமஸ்கிருதம் முதலியன

Leave a Reply