அயர்லாந்தின்  மூட நம்பிக்கைக்கும்  முட்டாள் தனத்துக்கும் பலியான பெண்  அயர்லாந்தின் கால்வே நகரில் உள்ள பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சிமையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிற இந்தியாவைசேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர்ரின் (வயது 36) மனைவி சவீதா ஹலப்பான்னாவர்(வயது 31) என்பவர் அதேநாட்டில் பல்மருத்துவராக பணியாற்றிவந்தார். நான்கு மாத கர்ப்பிணியான

சவீதா, ரத்தத்தில் பாக்டீரியா அதிகம்_உள்ள செப்டிகேமியா எனும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தசூழ்நிலையில் திடீரென அவரது வயிற்றிலிருந்த கரு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக தனது கருவை கலைக்கவேண்டி ப லமுறை ஹால்வேயில் இருக்கும் யுனிவர் சிட்டி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவ_நாடான அயர்லாந்து நாட்டில் மதநம்பிக்கை அடிப்படையில் ''கருக்கலைப்பு'' என்பது பாவச் செயலாகும் கருக்கலைப்பு என்பது குற்றமாகும் என ஆண்டாண்டு_காலமாக நடைமுறையில் இருக்கும் சட்ட மாகும். கருக் கலைப்பு என்பது மதத்திற்கும், சட்டத்துக்கும் எதிரானது என்பதால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தபெண்ணிற்கு கருக் கலைப்பு செய்யமுடியாது என கூறி மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இந்த சூழ்நிலையில் கடந்த  அயர்லாந்தின்  மூட நம்பிக்கை சிலநாட்களுக்கு முன்பு, இறந்தகருவால் சவீதாவின் வயிற்றில் தொற்று ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

மூட நம்பிக்கையாலும் முட்டாள் தனத்தாலும் ஒருபெண்ணின் கொன்றிருக்கிறது. இறந்துவிட்ட கருவை அகற்றிவிட்டு ஒருதாயின் உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவைக் கூட மதம் மழுங்கடித்து விட்டதா? அல்லது அதை சட்டம்தான் அனுமதிக்காதா? என்பதுதான் நமது கேள்வியாக இருக்கிறது. அது மட்டுமல்ல மதத்தின் பெயரிலான அந்தசட்டம் என்பது அந்த மதத்தை சேர்ந்த வர்களையும், அந்நாட்டை சேர்ந்தவர்களையும் மட்டுமே கட்டுப்படுத்துமேயன்றி மற்ற நாட்டவர்கள் மீதோ அல்லது மற்ற மதத்தினர்களின் மீதோ அதேசட்டத்தை திணிப்பது என்பது எப்படி முறையாகும்….?

மிகவேகமான அறிவியல் வளர்ச்சியைகாணும் இந்த காலக் கட்டத்தில், அறிவுப் பூர்வமான – அறிவியல் பூர்வமான சிந்தனையில்லாமல், இதை போன்ற மதத்தின் பெயரிலான மூட நம்பிக்கைகளையும், முட்டாள்தனமான சட்டங்களையும்பார்த்து மனித குலமே வெட்கப்பட வேண்டும். இனியேனும் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல் – அறிவியல் வளர்ச்சிகளுக்கு ஏற்றாற் போல் ஆட்சியாளர்கள் தங்கள் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ளவேண்டும்.

Leave a Reply