2019ம் ஆண்டுக்குள் ரயில்வே கிராசிங் இல்லா தேசிய நெடுஞ் சாலைகளை அமைக்கும் சேது பாரதம் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று டெல்லியில் துவக்கிவைத்தார்.

2019ம் ஆண்டுக்குள் ரயில்வே கிராசிங்குகள் இல்லா தேசிய நெடுஞ் சாலைகளை அமைக்கும் சேது பாரத திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக அரசு ரூ.10 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி யுள்ளது. சேது பாரதம் திட்டம் மூலம் ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 50 முதல் 60 ஆண்டு பழமையான 1,500 பாலங்களை. இடித்துவிட்டு புதிய பாலங்கள் கட்ட திட்டமிடபட்டுள்ளது. ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்ட 208 இடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply