தமிழகத்தின் குளச்சல் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் போக்கு வரத்து முனையம் தொடங்கப் படும் , சின்னஞ்சிறிய தீவு நாடான மாலத்தீவில்கூட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 47 விமான கப்பல்கள் இயக்கபடுகின்றன. ஆனால், இந்தியாவில் இந்தவசதி இல்லை.


இந்தியாவிலும் இந்தவசதியை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. முதல் கட்டமாக 25 விமான கப்பல்கள் இயக்கப்படும். இதற்காக விமான போக்கு வரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்டுள்ளோம்.

இதேபோல் வசதி படைத்தவர்கள் புதுமையாக திருமணம் செய்து கொள்வதற்கு இனி ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்துக்கோ, அல்லது வேறுநாட்டுக்கோ செல்ல தேவையில்லை. இந்தியாவின் கோவா, மும்பை மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளிலேயே ஆடம்பர கப்பல்களில் பிரம்மாண்ட திருமணங்களை நடத்தலாம். அதற்கான வசதிகளை மத்திய அரசு செய்துதரும். மேலும் சுற்றுலா பயணிகளை கவர 1,300 தீவுகளையும், 218 கலங்கரை விளக்கு களையும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.

நீர்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள குளச்சல் மற்றும் மகாராஷ்டிரா மாநில கடல்பகுதியில் கப்பல் போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது.

Leave a Reply