சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பனிச்சரிவில் சிக்கி மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் உயிர்இழந்துள்ளனர்.அவர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி வணக்கம் செலுத்துவதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வோம்.

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக வரலாறு அடங்கி கிடக்கிறது… அது என்ன தெரியுமா….

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, பெற்ற சுதந்திரத்தை காத்திட எண்ணற்ற தாய்மார்களின் கூந்த லில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத் தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.இந்த தேசத்திற்காக தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் மலர்களுக்கு கண்ணீருடன் மவுன அஞ்சலி..

சியாச்சின் பனிமலை பிரதேசம் தான் ஆர்டிக் அண்டார்டிக் துருவ பகுதிகளை தவிர்த்து உலகில் இரண்டாவது நீளமான பனிமலை பிரதேசம். இது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது.இந்தியா-பாகிஸ்தான் எல்லையைச் சுற்றி இமய மலைத் தொடர் களில் உள்ள காரகோரம் மலைகளில் அமைந் திருக்கிறது

உலகின் உயரமான போர்நிலையானசியாச்சின் பனிப் பகுதி யின் பெரும்பாலான போர் நிலைகள் 16 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவை. இவற்றில் பானே போஸ்ட் என்னும் போர் நிலை அதிகபட்சமாக 22 ஆயிரம் அடி உயரம் கொண்டது. இந்தப் பகுதியை பல ஆண்டுகளாக இந்திய பாகிஸ் தான் ராணுவங்கள் கண்டு கொண்டதே இல்லை.

1984 ல் தான் முதன் முதலில் பாகிஸ்தானை சேர்ந்த மலையே றும் வீர்கள் இங்கு வந்து பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள். இதற்கு பிறகு தான் இந்திய ராணுவம் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ஆப்பரேஷன் மெக்தூத் என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் . குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை விரட்டி, அப்பகுதியை இந்தியா வசம் மீண்டும் வந்தது.

சியாச்சின் பகுதியில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் பனி உறைந்து கிடக்கும். இந்த பகுதியை பாதுகாக்கும் பணியில் நமது ராணுவ வீரர்கள் இரவு பகலாக பணியில் ஷிப்ட் அடிப்ப டை யில் ஈடுபட்டு வருகிறார்கள்.இப்பகுதியில் சாதாரணமா கவே ஜீரோ டிகிரிக்கும் குறைவாகவும் . குளிர்காலத்தில் இந்த மைனஸ் 60 டிகிரிக்கும் கீழாக குளிர் இருக்கும் என்றால் அங்கே
காவல் காக்கும் தெய்வங்களை எண்ணி பாருங்கள்.

உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமில்லாத இந்த பிரதேசத்தில் இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும்இங்கு பணியில் இருக்கிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் பாதுகாப்பு பணியில் இருக்கும்
நிறைய வீரர்கள் விரக்தியினால் தற்கொலை செய்து கொள் கிறார் கள்.பனிப்புயல் ஏற்படும்பொழுது நிறைய வீர்கள்
சிக்கி உயிரிழப்பதும் இங்கே வாடிக்கையே.

இது வரை இங்கு ராணுவ சண்டைகளில் இறந்த வீரர்களை விட பனி காரணமாக இறந்த வீரர்களின் எண்ணிக்கை யே இங்கு அதிகம். சியாச்சின் பகுதியில்கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 7ம்தேதி இங்குள்ள பாகிஸ்தானின் கயாரி ராணுவ முகாம் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் 140 வீரர்கள் உயிர் இழந்தனர்.1984ம் ஆண்டு முதல் 860 இந்திய ராணுவ வீரர்கள் கணக்குப்படி பனியில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள் என்பதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

இப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்பவெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களி லோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு இங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது.

நன்றி விஜெயகுமார்

 

Leave a Reply