ஸ்மார் சிட்டி  குறித்து வெங்கய்ய நாயுடு இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத் தலைநகர் சென்னை மற்றும் கோவை நகரங்கள் ஸ்மார் சிட்டிகளாக உருவாகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுத்தமான குடிநீர் , தரமான சாலைகள், மின்சாரம், தூய்மை, கழிவு மேலாண்மை, இ கவர்னிங் உள்ளிட்ட துறைகளில் சிறப்புடன் விளங்கும். நகரம் மேலும் வளர்ச்சி பெறும் .

 மொத்தம் 97 நகரங்களில் முதல் 20 நகரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு அவர் கூறியதாவது:


நகரங்களை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்லும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஸ்மார் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீனப்படுத்துதல் , முன்னேற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கப்படும் .


ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநில அரசுகள் தங்களின் பரிந்துரை களை அனுப்பியுள்ளன. மக்களும் தங்களின் கருத்துக்களை அனுப்பியுள்ளனர் . போட்டியை மையமாகவைத்து இந்த முதல் பட்டியல் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 20 நகரங்களுக்கு ரூ.50,802 கோடி ஒதுக்கப்படும். தொடர்ந்து அடுத்தகட்டமாக 40 நகரங்கள், 38 நகரங்கள் வரிசைப்படி அறிவிக்கப்படும் .


தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்கள்: புனே (மகாராஷ்ட்டிரா ), புவனேஸ்வர் (ஒடிசா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் ), சூரத் ( குஜராத் ), கொச்சின் ( கேரளா ), ஷோலாப்பூர் (மகாராஷ்ட்டிரா ),ஆமதாபாத் ( குஜராத் ), ஜபல்பூர் ( மத்திய பிரதேசம் ), விசாகபட்டினம் (ஆந்திரா ), லூதியானா ( பஞ்சாப் ),  தவனகிரி (கர்நாடகா ), இந்தூர் (மத்திய பிரதேசம் ), டில்லி , கோயம்புத்தூர் ( தமிழ்நாடு ), காக்கிநாடா ( ஆந்திரா ), பெல்காம் ( கர்நாடகா ) , உதய்பூர் ( ராஜஸ்தான் ), கவுகாத்தி ( அசாம் ), சென்னை, போபால் ( மத்திய பிரதேசம் ) ஆகியன இடம் பெற்றுள்ளன . இந்நகரங்களில் மட்டும் 3.54 கோடி பேர் வசிக்கின்றனர்.

Leave a Reply