2 ஜி அலைகற்றை ஏலம் தொடர்பாக 60 கோடியை ஆலோசனை தொகையாக பெற்றிருக்கிறேன்’ என நீரா ராடியா வாக்கு-மூலம் கொடுத்திருக்கிறார்.

வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்கிற ஆலோசனை நிறுவனத்தை நீரா ராடியா நடத்தி வருகிறார் பல பெரிய நிறுவனங்களுக்கு அவர் ஆலோசகராச் செயல்படுட்டு வருகிறார் . அவர்களுடைய நிறுவனங்களின் செயல்பாடுகலில் ஏதேனும் இடையூறு இருந்தால் அவற்றைக் சரி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆவன செய்கிறார். தனது இந்த சேவைக்காக அவருக்கு கோடிக்கணக்கில் கட்டணம் தரப்படுகிறது.

அவருடைய வாடிக்கையாளரில் ஒன்றான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிடைப்பதற்கு தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைக்காக ரூ.60 கோடியை கட்டணமாக பெற்று கொண்டதையும் அவர் ஒப்பு கொண்டிருக்கிறார்.

Leave a Reply