ப.சிதம்பரம் உடனே பதவி விலகவேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையிலிருந்து அவரை நீக்க வேண்டும்’ என்று , தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாவது:

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பது தெளிவாகி உள்ளது. தணிக்கைதுறை தலைவரின் அறிக்கையில்அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூ இழப்பு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, சிதம்பரம் உடனே அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும் அல்லது அமைச்சரவையிலிருந்து விலக்க வேண்டும். மேலும், ராஜாவுக்கு_எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்தது போன்று , சிதம்பரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply