சமச்சீர் கல்விக்கு_எதிர்ப்பு தெரிவித்து நேற்று தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் திருவாரூர்_கொடராச்சேரியில் மாணவர்களை பள்ளிக்கு செல்ல விடாமல் மறித்து திருப்பி அனுப்பினர்.

எனவே மாணவர்கள் திரும்பி சென்ற அரசு பஸ் லாரி மோதி குளத்தில்_விழுந்தது. இதில் சிக்கி பள்ளி மாணவன் விஜய் உயிரிழந்தார்.

இதற்கு மாவட்ட தி.மு.கவினரே காரணம் என்று போலீசார் வழக்குபதிவு செய்து. இது தொடர்பாக மாவட்டசெயலர் பூண்டி கலைவாணனை கைதுசெய்ய போலீசார் திட்டமிட்டனர்.

இந்நிலையில் மொழிபோர் தியாகி பக்கீர்மைதீன் படதிறப்பு விழாவிற்க்காக மு.க., ஸ்டாலின் திருவாரூர்_வந்தார். இவர் வந்த வாகனத்தை மறித்த போலீசார் கலைவாணனை கைது செய்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கு ஸ்டாலின் இல்லாமல் கைதுசெய்ய அனுமதிக்க_முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார். எனவே போலீசாருக்கும், தி.மு.கவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் ஸ்டாலினையும் கைதுசெய்து திருவாரூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். ஸ்டாலின் கைதை தொடர்ந்து திருவாரூர் , திருத்துறைபூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கபட்டுள்ளன.

Tags:

Leave a Reply