மாமல்லபுரத்தில் இருக்கும் தலசயனப் பெருமாள் கோயிலை மத்திய தொல் பொருள் ஆராய்ச்சிதுறை கையகப்படுத்தகூடாது, அப்படி மீறி கையகபடுத்தினால் மக்களின் கோபத்துக்கு ஆலாக நேரிடும் என்று, காஞ்சிபுரம் தொகுதி எம்பி.,யான விஸ்வநாதன் பார்லிமென்டில் கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து அவர் லோக்சபாவில் பேசியதாவது , “மாமல்ல புரத்தில் மிக பிரசித்திபெற்ற தலசயனப் பெருமாள் கோயில் மிக தொன்மையானது. அந்த கோயிலை மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை தனது பராமரிப்பின் கீழ் எடுத்து கொள்ள முயற்சி செய்கிறது . அதற்கு மக்களிடையே எதிர்ப்பு காணப்படுகிறது.

மக்களின் பாரம்பரியம் , கலாசார வழிபாட்டு உணர்வை புறந்தள்ளி விட்டு, கோவிலை தன்வசப்படுத்துவதை ஏற்க்க முடியாது . அதையும்மீறி கோயிலை தன் வசப்படுத்தும் காரியங்களில், இறங்கினால், மக்களின் கோபத்துக்கு ஆலாக நேரிடும்’ என்றார்.

Leave a Reply