இந்தியாவின் அதிநவீன உளவுவகை செயற்கைக்கோள் ராடார் இமேஜிங் சாட்டிலைட் – ரிசாட் 1 ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இன்று காலை 5.47க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பனி, மழை போன்ற மோசமான பருவ காலத்திலும் துல்லியமாகப்

படங்களை எடுத்துத் தரும் வசதி கொண்டது “ரிசாட்-1′ செயற்கைக்கோள். இது, பி.எஸ்.எல்.வி. சி-19 ராக்கெட் மூலம் இன்று வியாழக்கிழமை காலை ஏவப்பட்டது. சரியாக ராக்கெட் தனது சுற்றுப் பாதையில் சரியான திசையில் ஏவப்பட்டதும்,

இப்போது பனி, மழை போன்ற மோசமான பருவ காலங்களில் தெளிவான படங்களைப் பெற வேண்டுமானால் கனடா நாட்டின் செயற்கைக்கோளையே நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. ரிசாட்-1 செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் அத்தகைய படங்களை மற்ற நாட்டின் துணையின்றி நாமே பெறலாம்.

ரிசாட்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இந்த வகை பி.எஸ்.எல்.வி ராக்கெட் (போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள்) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை வடிவமைக்க ரூ.378 கோடியும், ராக்கெட்டை தயாரிக்க ரூ.120 கோடியும் செலவிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் இயக்குனர் வளர்மதி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமை படத்தக்க ஒன்றாகும் . ரிசாட்-1 செயற்கைக்கோள் 10 ஆண்டு காலமாக விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் இந்தியாவிலே‌யே தயாரிக்கப்பட்ட ஒன்று. இதற்கு முன்னர் இஸ்ரேல் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட தொழில்நுட்பத்தை இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திவந்தது. இந்த செயற்கைக்கோள், அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ ‌தொழில்நுட்பப் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ரிமோட் இமேஜிங் சாட்டிலைட் ரிசாட் -1 விண்ணில் ‌செலுத்தப்பட்டதன் மூலம் பூமியின் பரப்பை துல்லியமாகக் கண்காணிக்கலாம் . இதன் மூலம் 1 மி.மீ நீள, அகலமுள்ள பொருட்களையும் துல்லியமாக படம்பிடிக்க முடியும். நிலப்பரப்பில் கோதுமை, நெல் போன்ற விவசாய பயிர் பரப்பு எவ்வளவு என்பதையும் கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்கமுடியும். அதன் அடிப்படையில் அரசு விவசாய மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கமுடியும். மேலும், பயங்கரவாதிகள் நடமாட்டம், குற்றச் செயல் தடுப்பு, இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிதல், வெள்ளம், ஆறுகளில் நீர் வரத்து உள்ளிட்டவற்றை கணிக்க முடியும்.

Tags:

Leave a Reply