வந்தே மாதரம் ஒரு வினோதமான மந்திரம்  சுரேந்திரநாத் பானர்ஜிசுரேந்திரநாத் பானர்ஜி அரசாங்க சிவில் அலுவலராக இருந்து மக்களுடன் உரிமைக்காக பாடுபடும் எண்ணத்துடன் தனது உயர்பதவியினை துறந்தவர், இவர் "வங்காளி" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்தார்.

1883ல் ஆங்கிலேய நீதிபதி ஒருவர் தமது தீர்ப்பு ஒன்றில
் ஹிந்துக்களின் விக்ரஹ வழிபாட்டினை அவதூறு செய்து எழுதியற்காக சுரேந்திரநாத் பானர்ஜி தமது வங்காளி பத்திரிகையில் அவரைத்தாக்கி எழுதியவர், அதற்காக இரண்டு மாதம் சிறைவாசம் சென்றவர்,

1905 கர்ஸானின் வங்கப் பிரிவினைக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சுரேந்திரநாத் பானர்ஜி தமது வங்காளி பத்திரிகையில் " தேசிய எழுச்சிக்கு ஆங்கில அரசின் இந்த விபரீத திட்டம் வழி வகுத்து விட்டது. இது ஒரு மாபெரும் அபாயம் என்று ஆங்கிலேயர் விரைவில் உணர வேண்டும்," என்று கர்ஜனை செய்தார்,

இப்போது உள்ள தலைவர்கள் பலர் சொல்லும் வசனம் " நான் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்" இந்த வசனத்தினை முதன்முதலாக சொல்லியவர் மஹாகவி பாரதியார்,

அன்றைய சுதேசமித்திரனில் மஹாகவி பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்றில் "சுரேந்திரநாத் பானர்ஜி ஒரு சக்தி வாய்ந்த தலைவர், மாபெரும் சிம்ம கர்ஜனைக்கு சொந்தக்காரர், அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்" என்று வானளாவி புகழ்ந்து தள்ளிவிட்டார்,

நாடு முழுக்க வங்கப்பிரிவினைக்கு எதிர்ப்பு, வங்காளத்தில் எல்லை கடந்த எதிர்ப்பு, எங்கு பார்த்தாலும் வங்க மக்கள் "வந்தே மாதரம் , வந்தே மாதரம்" என்று என்று கோஷமிட்டதைக் கண்டு பிரிட்டிஷ்காரர்கள் நடுநடுங்கிப் போய்விட்டார்கள்,

இதனைக் கண்ட சுரேந்திரநாத் பானர்ஜி இந்த வந்தே மாதரம் ஒரு வினோதமான மந்திரம், இதனை அன்புடன், ஆவேசத்துடன் உச்சரிக்கும் தொண்டர்களுக்கு அபரிமிதமான துணிச்சலையும், எத்தனை முறை அடித்தாலும் அதனால் தளர்ந்து போகாத ஆற்றலையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான மந்திரம், அதே சமயம் தேச விரோதிகளுக்கும் அந்நியர்களுக்கும் அச்சத்தினை தரக்கூடிய ஒரு சிம்ம சொப்பனமான மந்திரமாக இன்றையதினம் திகழ்கிறது, என்று கொக்கரித்தார்,

இந்த உரையைக் கேட்ட ஆங்கில அரசு "வந்தேமாதர கோஷம் சட்ட விரோதமானது, எனவே வந்தேமாதரம் கோஷம் போடுபவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்", என்று கூறி வந்தேமாதரத்தினை தடை செய்தனர்,

நன்றி ; ராம் குமார்

Leave a Reply